TamilSaaga

சிங்கப்பூரில் விபத்தில் சிக்கிய 7 வாகனங்கள்.. 10 பேர் காயம் – முழு விவரங்கள்

சிங்கப்பூரில் நேற்று திங்கள்கிழமை (செப் 27) காலை பான்-ஐலண்ட் எக்ஸ்பிரஸ்வேயில் (பிஐஇ) ஏழு வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் 10 பேர் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஜலான் யூனோஸ் பகுதியில் வெளியேறும் முன், காலை 8 மணியளவில் சாங்கி நோக்கி PIE வழியாக நடந்த விபத்து குறித்து தகவல் சொல்லப்பட்டதாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது.

சிறிய காயங்களுடன் மூன்று பேரை அதிகாரிகள் மதிப்பீடு செய்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விரும்பவில்லை என தெரிவித்தது.

சிஎன்ஏ வாசகர் அனுப்பிய ஓர் வீடியோவில் விபத்து நடந்த இடத்தில் ஏழு வாகனங்கள் இருப்பதைக் காட்டியது. அவர்கள் முதல் மற்றும் மூன்றாவது பாதைகளை ஆக்கிரமித்து காணப்பட்டனர், ஒரு வழிப்பாதையை மட்டுமே போக்குவரத்துக்காக திறந்து வைத்திருந்தனர் என்பது அந்த வீடியோவில் புலப்பட்டது.

டிரெய்லர், மோட்டார் சைக்கிள், மூன்று லாரிகள் மற்றும் இரண்டு கார்கள் இந்த விபத்தில் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

25 வயதான லாரி டிரைவர், 24 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், மற்றும் 25 லிருந்து 45 வயதுக்குட்பட்ட மூன்று லாரிகளில் இருந்து எட்டு பயணிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது நினைவுடன் இருந்ததாக போலீசார் தகவலில் தெரிவித்தனர்.

மேற்படி போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

Related posts