பெரும்பாலானவர்கள் வயசாச்சுல பாத்து நடங்க என ஒவ்வொரு முறையும் டயலாக் பேசுவதை தான் கேட்டு இருப்போம். இங்கு ஒரு பாட்டியின் அசால்ட் திறமையால் இனி இந்த டயலாக் பேசுபவர்கள் கொஞ்சம் சூதானமாக பேச வேண்டியது முக்கியமாக இருக்கிறது.
Age is just a number என்பதை பலர் நிரூபித்துள்ளனர். 90 வயதில் சொந்தத் தொழிலைத் தொடங்கும் வயதான பெண்கள் முதல் தங்கள் மாஸ் டான்ஸ் என பலரும் பல சாகசங்கள் செய்து தொடர்ந்து சமூகத்தில் இருக்கும் எண்ணத்தினை காலி செய்து வருகின்றனர். அந்த வரிசையில் புதிய அடையாளமாக மாறி இருக்கிறார் 67 வயது பாட்டி. ziplineல் ஹெல்மெட் போட்டுக்கொண்டு அவர் சைக்கிள் ஓட்டியதை பார்த்த அனைவருமே மாஸ் பாட்டி என சொல்லாமல் இருக்க மாட்டார்கள்.
இதையும் படிங்க: தனுஷின் VIP பட பைக்கிற்கே Tough கொடுத்த சிங்கப்பூரர்.. ஒரே மாதத்தில் 2000 கிலோமீட்டர் பயணம் – தாய்லாந்தை சுற்றி வலம்வரும் ஒரு Free Bird
இந்த வீடியோவை ஷை நு என்ற யூசர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மஞ்சள் புடவையில் இருக்கும் பாட்டி Zipline அருகில் இருக்கிறார். ஹெல்மெட் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு வாயில் எதையே மென்னுக்கொண்டே சின்ன பயம் கூட இல்லாமல் கெத்தாக சைக்கிள் ஓட்டி வருவதுடன் அந்த வீடியோ முடிவடைகிறது. தரை மட்டத்திலிருந்து எக்கசக்க உயரத்தில் அமைக்கப்பட்ட இந்த சாகசத்தில் சிறிய வயதினரே ஏறும்போது பயம் வரும். ஆனால் அந்த பாட்டி முகத்தில் எள்ளளவு பயம் கூட இல்லை.
பாட்டியின் அசல் சாகத்தினைக்காண இங்கே கிளிக் செய்யவும்
அந்த பதிவின் கேப்ஷனில், ஷை நு, “எனக்கு பயமில்லை மகனே, நான் சைக்கிள் ஓட்டுவேன், நீ என்னுடன் வா, 67 வயதில், அந்த அம்மா தனது விருப்பத்தை நிறைவேற்ற எங்களிடம் வந்தார். அதை நாங்கள் நிறைவேற்றினோம்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வீடியோ இரண்டு நாட்களுக்கு முன்பு பகிரப்பட்டது. சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதில் இருந்து, 200க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர், மேலும் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.