ஜூலை மாதம் நடுப்பகுதியில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்படலாம் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் தெரிவித்துள்ளார். பணிக்குழு நடத்திய கூட்டத்தில் இன்று பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதில் ஜூலை மாதம் நடுப்பகுதியில் உணவகங்களில் 5 பேர் வரை ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணலாம் என்ற தளர்வு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் லாரன்ஸ் தெரிவித்தார். சிங்கப்பூரில் தடுப்பூசி வழங்கும் பணி அதிகரித்துள்ளதால் பல தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் வரும் வாரங்களில் சிங்கப்பூரில் தொற்று நிலைமையை குறித்து மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
சிங்கப்பூரில் தற்போது தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. இந்நிலையில் அதிக அளவில் தடுப்பூசிகள் போடப்படும் நிலையில் பிற நாட்டு ஊழியர்கள் மற்றும் பணிப்பெண்களை மீண்டும் சிங்கப்பூருக்குள் அனுமதிக்க அது வழிவகுக்கும் என்று அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சரான கான் கிம் யோங் பிற அமைச்சர்களுடன் நடந்த ஆலோசனையில் இதனை கூறினார். மேலும் ஆட்கள் பற்றாக்குறையால் அவதிப்படும் நிறுவனங்களுக்கு இது பெரிய பலனை அளிக்கும் என்றும் அவர் கூறினார்.