TamilSaaga

2022ன் கடைசி நாள் சுமந்து வந்த துக்க செய்தி… சிங்கப்பூரில் தீயிற்கு இரையான இந்தியர்… MOM வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

சிங்கையில் 2022ம் ஆண்டு கடைசி நாளில் துக்க நிகழ்வாக ஒரு இந்தியர் தீயிற்கு இரையாகி இருக்கும் தகவல் பலருக்கும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த பணியிட இறப்பு குறித்து சனிக்கிழமை MOM அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், 21 Tuas Avenue 3ல் வேலை செய்து நடந்து கொண்டிருந்தது. அப்போது நடந்த தீ விபத்தில் 38 வயதான இந்தியர் சிக்கி உயிரிழந்தார். இந்த விபத்துக்கு காரணமாக சம்பவ இடத்தில் இருந்த சிலிண்டர்களில் இருந்து acetylene உட்சபட்சமாக வெளியானது தான் எனக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் சிக்கிய 43 வயதான மற்றொரு சீனா ஊழியர் காப்பாற்றப்பட்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். வெள்ளி டிச.29 காலை 9.25 உருவான தீ அடுத்த 25 நிமிடங்களில் அணைக்கப்பட்டு விட்டது.

Asia Technical Gas நிறுவனத்தில் இருக்கும் சிலிண்டர்களை செக் செய்யும் வரை வேலைகளை நிறுத்தும்படி MOM தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரியக்கூடிய வாயுக்களைக் கொண்ட எரிவாயு சிலிண்டர்களைக் கையாளும் போது, ​​உள்ளிருக்கும் வாயு வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், வேலை பார்க்கும் சூழலில் தீ விபத்து ஏற்படாமல் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.

2022ம் ஆண்டில் இதுவரை 45 விபத்துகள் பதிவாகி இருந்த நிலையில், இதனுடன் சேர்த்து 46வது விபத்தாக உயர்ந்து இருக்கிறது. 2016ம் ஆண்டில் 66 பணியிட இறப்பு நடந்தது. அதன்பிறகு இந்த எண்ணிக்கை தான் அதிகமாக கூறப்படுகிறது.

இன்றுவரை, 11 நிறுவனங்கள் ஆபத்தான மற்றும் பெரிய விபத்துக்கள் காரணமாக புதிய வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளன.

தொழிலாளர்களும், பொதுமக்களும் பாதுகாப்பற்ற நடைமுறைகள் குறித்து அமைச்சகத்திடம் mom.gov.sg/report-wsh-issues என்ற முகவரியில் அல்லது 6438-5122 என்ற எண்ணில் புகார் செய்யலாம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts