சிங்கப்பூரில் பெருந்தொற்றுக்கு 37வது நபர் தற்போது பலியாகி உள்ளார். அந்த மூதாட்டிக்கு வயது 81. அவர் இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. புக்கிட் மேரா பெருந்தொற்று குழுமத்துடன் தொடர்புடைய அந்த மூதாட்டி தற்போது காலமானார்.
சிங்கப்பூரில் நேற்று (ஜூலை 21) புதிதாக 130 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் Jurong Fishery Port கிளஸ்ட்டரில் தான் அதிக அளவில் தொற்று உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூரோங் கிளஸ்ட்டரில் மட்டும் 25 பேருக்கும் மேல் தொற்று உறுதியானது.
வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பும் பலரிடம் தொற்று பரவல் அதிகமாக காணப்படும் நிலையில் பல நாடுகளுக்கு தங்களுடைய எல்லைகளை கடுமையாகிவருகின்றது சிங்கப்பூர் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுவரை சிங்கப்பூரில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 64,054 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. அதே சமயம் சிகிச்சை முடிந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62,212ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பால் 490 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிங்கப்பூரில் இதுவரை 37 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர்.