சிங்கப்பூரில் நேற்று (ஜீலை.14) மனிதவள அமைச்சர் டான் சீ லெங் வேலைவாய்ப்பு வளர்ச்சி ஊக்க திட்டத்தினை பற்றி வெளியிட்ட ஒரு செய்தியில் 1600 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க இந்த JGI திட்டம் துணைபுரிந்துள்ளது என கூறியுள்ளார்.
சிங்கப்பூர் ஜூராங் சாலையில் உள்ள The Social Kitchen’s விற்பனை நிலையத்தை பார்வையிட்ட போது, சிறப்பு தேவையுடைய மக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஒற்றை தாய்மார்கள் அல்லது வீடு இழந்த மக்களுக்கு பணிகளை வழங்கி வருவதை சிறப்பித்து நினைவுகூர்ந்தார்.
வேலைக்கு ஆட்கள் எடுக்கும் போது 10ல் 6 பேர் வேலையில்லாமல் இருந்தனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் 6 மாதத்துக்கும் மேலாக வேலையில்லாமல் இருந்திருக்கின்றனர். இவர்களுக்கு பணி வழங்கும் போது அவர்கள் அதனை அனுபவிக்க முடியும்.
இந்த வகையிலானவர்களை பணியில் அமர்த்துவதில் உணவு, சுற்றுச்சூழல் மற்றும் மொத்த வர்த்தக துறை முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் இந்த துறைகளில் 10ல் நான்கு பேருக்கும் அதிகமாக JGI ஆதரவில் பணிபெற்ற தொழிலாளர்கள் உள்ளனர்.
சிங்கப்பூரில் இதுவரை 15 முதல் 64 வயதுள்ள மாற்றுத்திறனாளிகள் 32,000 பேர் உள்ளதாக நாடாளுமன்றத்தில் நவம்பர் மாதம் பகிரப்பட்டது. அதில் 9000 பேர் பணியில் உள்ளனர். 1000 பேர் வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் மற்றும் 22,000 பேர் தொழிலாளருக்கான சக்தி பெற்றவர்களாக இல்லை என சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் பகிர்ந்துள்ளது.