TamilSaaga

மின்சாரம் தாக்கி ஊழியர் பலி – எஸ்பி பவர்கிரிட் நிறுவனத்திற்கு 1,50,000 வெள்ளி அபராதம்

சிங்கப்பூரில் பணியிடத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிங்கப்பூர் பவர் குழுமத்தின் எரிசக்தி பகிர்மான நிறுவனமான எஸ்பி பவர்கிரிட் நிறுவனத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதனை அடுத்து அரசு அந்த நிறுவனத்திற்கு சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் டாலர் அபராதம் விதித்துள்ளது. இந்த சம்பவத்தில் மரணமடைந்தவர் கிலோபல் மரின் கன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் இன்ஜினியர் நிறுவனத்தைச் சேர்ந்த திரு. அசோகன் சுப்பிரமணியம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் துணை மின் நிலையம் ஒன்றில் நடைபெற்ற பணிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். துணை மின் நிலையம், அதிசக்திவாய்ந்த மின்சாரத்தை குறைந்த சக்தி வாய்ந்த மின்சாரமாக மாற்றும், அது வீடுகள், வர்த்தக கட்டிடங்கள் பொது சேவை மையங்கள் ஆகியவற்றுக்கு பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த குறிப்பிட்ட துணைமின் நிலையம் மூடப்பட்டு இருந்ததால் அதன் தொடர்பான மின்சார கம்பிகளை அகற்றும் பணிகளில் உதவுவதற்காக திரு. அசோகனும் அவரது ஐந்து ஊழியர்களும் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்து உள்ளனர்.

மேலும் எஸ்பி பவர்கிரிட் தொழில்நுட்ப அதிகாரி முஹம்மது நூறும் சம்பவ இடத்தில் இருந்துள்ளார். அசோகன் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே மின்சார கம்பிகளை அகற்றிவிட்டு அங்கிருந்து நூர் கிளம்பிரியுள்ளார்.

அதன் பிறகு அசோகன் நிகழ்விடத்திற்கு வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் யாரும் இல்லை. இதனை தொடர்ந்து கம்பிகளை அகற்ற அசோகன் முயன்றபோது மின்சாரம் தாக்கி அவர் இறந்துள்ளார்.

Related posts