சிங்கப்பூரில் உள்ள அனைத்து 24 சமூக சேவை அலுவலகங்கள் மற்றும் 47 குடும்ப சேவை மையங்களுக்கு சுமார் 1,40,000 ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் (ART) கருவிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அவை குறைந்த வருமானம் கொண்ட குடியிருப்பாளர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூரில் ART கருவிகளை வாங்குவதில் குறைந்த வருமானம் கொண்ட குழுவினரின் நிதிச் சுமையைக் குறைக்க உதவும் என்றும், அவர்களுக்கு தேவைப்படும்போது தாங்களாகவே சுய பரிசோதனையை ஊக்குவிக்கவும் இது உதவும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யே குங் நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 18) தனது Facebook பதிவில் தெரிவித்தார்.
இந்த ART கிட் மூலம் குறைந்த சம்பளம் கொண்ட குடும்பத்தினரும் தங்களுக்கு உடல் நலம் குறையும்போது தேவைப்படும் பட்சத்தில் கிட்களை பயன்படுத்தி சோதித்துக்கொள்ளலாம்.