இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவின் Sarawak மாநிலத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 12 ஆவணங்களற்ற குடியேறிகளை மலேசிய ராணுவம் திருப்பி அனுப்பியுள்ளது.
முதல் சம்பவத்தில் 3 குடியேறிகளும் இரண்டாவது சம்பவத்தில் 9 குடியேறிகளும் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். “அவர்களை கைது செய்து விசாரித்ததில் அவர்களிடம் எவ்வித முறையான பயண ஆவணங்களும் இல்லை என்றும் அவர்கள் மலேசியாவிற்கு வேலைத்தேடி வந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது,” என ராணுவத்தின் மக்கள் தொடர்பு பிரிவு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.