கடந்த 27ம் தேதி 25 முதல் 59 வயது மதிக்கத்தக்க 11 பேர் சிங்கப்பூர் போலீஸ் அதிகரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாக்கப்பட பகுதிக்குள் அவர்கள் அத்துமீறி நுழைந்ததால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாண்டாய் சாலை வழியாக பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து டூரியன் பழங்களை பறிக்க சென்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 10 ஆண்கள் மற்றும் 1 பெண் அந்த குழுவில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.40 மணியளவில், மாண்டாய் சாலை பகுதியில் நடந்த சண்டை சம்பவம் குறித்து கிடைத்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். அப்போது அந்த 11 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
போலீசார் மற்றும் உரிய அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களுக்குள் நுழைய கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த தடையை மீறுபவர்களுக்கு 1,000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.