சிங்கப்பூர் அரசு வழங்கும் கோவிட்-19 மானிய உதவியை பெறுவதற்காக பென்னி ஓங் என்ற 44 வயது ஆண் விண்ணப்பம் அளித்திருந்தார். அதில் தான் ஏற்கனவே வேலை பார்த்துக்கொண்டு இருந்த டாவிஸ் கிட்டார் என்ற நிறுவனத்தில் இருந்து விலகியதற்கான கடித்ததையும் சேர்த்து இருந்தார்.
சமுதாயம் மற்றும் குடும்பநல மேம்பாட்டு அமைச்சகம் அந்த விண்ணப்பத்தை சோதனை செய்து பார்க்கும் போது அவர் வேலையில் இருந்து விலகியதாக கூறி அளித்த கடிதம் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசின் மானியமும் அவருக்கு இதுவரை கிடைக்கவில்லை என்பதும் தெரியவந்தது.
போலி வேலையை செய்த நபரை விசாரித்த போது, ஜீலை மாதம் அவர் அந்த நிறுவனத்திலிருந்து விலகியதாக அளித்த கடிதம் போலி எனவும், மானியத்துக்காக இதனை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
விசாரணைக்கு பிறகு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அவருக்கு கிடைக்கப் பெற்றது.