TamilSaaga

சிங்கப்பூரில் வீட்டு வாடகை கடந்த வருடம் போல் அதிகரித்துக் கொண்டே இருக்குமா? அல்லது குறையுமா? சில புள்ளி விவரங்களுடன் தகவல்கள்

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் work permit, PCM permit மூலம் வருபவர்களுக்கு அவர்களை வேலை தரும் கம்பெனி சார்பில் தங்குவதற்கு ரூம்கள் ஏற்பாடு செய்து தரப்படும். ஆனால் s pass, e pass மூலம் வருபவர்கள் கண்டிப்பாக வெளியில் வாடகைக்கு ரூம்கள் எடுத்து தான் தங்க வேண்டும். முக்கியமாக டூரிஸ்ட் விசாவில் மூலமாக வருபவர்கள் கண்டிப்பாக வெளியில் ரூம்களை வாடகைக்கு எடுத்து தங்க வேண்டும்.

சிங்கப்பூரில் வீட்டு வாடகை 2023ம் ஆண்டு, 2024 ம் ஆண்டின் துவக்கத்தில் உச்சத்தை தொட்டிருந்தது. ஆனால் தற்போது சிங்கப்பூரில் வீட்டு வாடகை குறைய துவங்கி உள்ளது என்றே சொல்லலாம். ஆனால் இந்த வாடகை குறைப்பு என்பது சிங்கப்பூரில் உள்ள அனைத்து இடங்களிலும் கிடையாது. குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே. அதாவது, நகரை விட்டு விலகி இருக்கும் புறநகர் பகுதிகள் சிலவற்றில் மட்டுமே தற்போது வீட்டு வாடகை அளவு குறைய துவங்கி உள்ளது.

கோவிட் தொற்று காலங்களில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகளை சிங்கப்பூர் அரசு நிறுத்தி வைத்திருந்தது. இதனால் வீடு கிடைப்பதும், வீட்டு வாடகையின் அளவும் மிகவும் அதிகரித்தது. ஆனால் தற்போது மீண்டும் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டுள்ளதால் சிங்கப்பூர் அரசு அதிக அளவிலான வீடுகளை திறந்து வருகின்றன. இது தான் தற்போது சிங்கப்பூரில் வீட்டு வாடகை குறைந்து வருவதற்கு காரணம். இனி வரும் காலங்களிலும் இன்னும் அதிகமான வீடுகள் திறக்கப்பட உள்ளதால் பல பகுதிகளில் இன்னும் வாடகை அளவு குறையலாம் என எதிர்பார்க்கப்படும்.

கடந்த ஆண்டு சிங்கப்பூர் நாணய வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, வீடுகளின் விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டின் இறுதிக்குள் 4,00,000 வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்றும், தனியார் மற்றும் பொது வீட்டுத் திட்டங்களின் கீழ் இன்னும் 2 ஆண்டுகளில் கிட்டதட்ட 100,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட உள்ளது என்றும் சொல்லப்பட்டது. 2023ம் ஆண்டின் பிற்பகுதி முதலே கூட்டுரிமை வீடுகளுக்கான வாடகை தொடர்ந்து நான்கு மாதங்களாக குறைந்து வருகிறது. இதற்கு மாறாக, வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கான வாடகை சற்று அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து
தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts