சிங்கப்பூரில் தெலோக் பிளாங்கா சந்தியில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் அவர்களது கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் இன்று கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிகழ்வு குறித்து வெஸ்ட் கோல்ட் குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரேச்சல் ஆங் தனது முகப்புத்தகத்தில் தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உணவக நிலையம், சந்தையில் கடைகள் வைத்திருக்கும் கடைக்காரர்கள் ஆகியோர் இணைந்து தங்களுக்கு கிருமித்தொற்று பரிசோதனை நடத்துமாறு நேற்று கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் அவர்களுடைய கோரிக்கையை ஏற்று சுகாதார அமைச்சகம் இன்று இந்த கொரோனா பரிசோதனை ஏற்பாடுகளை செய்திருப்பதாக ரேச்சல் ஆங் தெரிவித்தார். இன்று காலை 9 மணி முதல் இந்த பரிசோதனையானது நடைபெற்று வருகிறது.
தெலோக் பிளாங்கா ட்ரைவ் சந்தையில் பணியாற்றும் 42 வயது மதிப்புடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தூய்மை பணிக்காக அந்த சந்தை மூன்று நாட்கள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது தெலோக் பிளாங்கா சந்தையில் தூய்மைப்படுத்தும் பணி நடந்து வரும் நிலையில் நாளை இந்த பணிகள் முடிவடையும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.