சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் வாரத்தில் ஒரு முறை நம் ஊர் உணவை சுவைக்க வேண்டுமானால் கண்டிப்பாக தேக்கா அல்லது லிட்டில் இந்தியாவிற்கு தான் செல்ல வேண்டும். அப்படி தேக்கா நிலையத்தில் உணவு அருந்தும் பொழுது உங்களது உணவு மேஜையை சுத்தமாக வைத்துக் கொள்வது உங்களது பொறுப்பு என சிங்கப்பூரில் தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.
தேக்கா நிலையத்தில் வாடிக்கையாளர்கள் உணவு மேசையில் அமர்ந்து உணவு அருந்தும் பொழுது கண்ணாடி குவளை மற்றும் கூல் ட்ரிங்க்ஸ் டின் போன்றவற்றை அப்புறப்படுத்தாமல் சென்றதால் தேசிய சுற்றுப்புற அதிகாரிகள் அவரை அணுகி சாப்பிட்ட பொருட்களை துப்புரவு செய்யுமாறு அறிவுறுத்தினர் இந்த பதிவு வீடியோவாக எடுக்கப்பட்டு டிக் டாக்கில் பதிவு செய்யப்பட்ட பொழுது மூன்று லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அந்த வீடியோவினை பார்த்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் வாடிக்கையாளர் விளக்கம் கேட்ட பொழுது உணவருந்த மேசை துப்புரவாக இருந்தால் உணவருந்த வருவோருக்கு உபயோகமாக இருக்கும் என்று எடுத்துரைத்தனர் . மேலும் நாம் உட்கொண்ட இடத்தினை சுத்தமாக வைத்துக் கொள்வது நமது பொறுப்பு என்றும் எடுத்துரைத்தது. உணவு மேசையை வாடிக்கையாளர் துடைக்க தேவையில்லை என்ற போதும் மேசையில் இருந்து சாப்பிட்ட குப்பையை அகற்ற வேண்டியது வாடிக்கையாளரின் பொறுப்பு என விளக்கம் கூறியது . எனவே இனிமேல் உணவருந்த செல்லும் நண்பர்கள் கவனமாக இருக்கவும்.