சிங்கப்பூரில் வேலை செய்ய ஆசைப்படும் ஊழியர்கள் அனைவருக்குமே டெஸ்ட் அடித்து செல்லும் போது நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் என நம்புகிறார்கள். ஆனால் அதை விட டெஸ்ட் முடித்து விட்டு சிங்கப்பூர் போகும் போது உங்களுக்கு ஏமாற்றம் என்பதே கிடையாது. முதலில் செலவுகள் இருந்தாலும் அடுத்தடுத்த முறை சிங்கப்பூர் செல்லும் போது ஒரு லட்சத்திற்குள் எல்லா செலவுகளும் முடித்து விடலாம்.
தமிழ்நாட்டில் இருக்கும் இன்ஸ்ட்டியூட்களில் சேர்ந்து 60 நாட்கள் வரை பயிற்சி எடுத்து நீங்க தேறிவிட்டீர்கள் என தெரிந்தால் உங்களை மெயின் டெஸ்ட்டிற்கு அனுப்புவார்கள். அது முடித்தவுடன் வரும் சான்றிதழை வைத்து கம்பெனி போட்டு சிங்கப்பூர் வேலைக்கு வருவது தான் வாடிக்கையாக இருக்கிறது. இப்படி வேலைக்கு வரும் போது சம்பளத்துடன் பெரிய அளவில் ஓவர் டைமும் தருவார்கள்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலை இல்லாமல் நேரடியாக வந்து டெஸ்ட் அடிக்கலாம்.. Social visit பாஸ் இருக்கு… வெறும் 1 லட்சத்திற்குள் முடித்து விடலாம்… ஆனா?
இன்னும் சிலருக்கு முதலில் பெரிய தொகை செலவு செய்ய முடியாத நிலை இருக்கும், அப்படி இருப்பவர்கள் pcm permit, tep அல்லது twp பாஸில் சிங்கப்பூர் வேலைக்கு வரலாம். இங்கு சில வருடம் வேலை செய்து விட்டு இங்குள்ள இன்ஸ்டியூட்களில் டெஸ்ட் அடிக்கலாம். ஆனால் நீங்க construction துறையில் வேலை செய்தால் அந்த நிறுவனத்திலேயே மாறிக்கொள்ள முடியும். இதனால் மற்ற பாஸ்களில் வேலைக்கு செல்லும் போது அந்த நிறுவனத்தில் முதலில் விசாரித்து கொள்ளுங்கள்.
சிங்கப்பூரில் நீங்க டெஸ்ட் அடிப்பது ரொம்பவே சுலபமானது. 3 நாளில் பயிற்சியினை முடித்து மெயின் டெஸ்ட் முடித்து விடலாம். வகுப்புகள் முதலில் 4 மணி நேரம் மட்டுமே நடக்கும். பிராக்டிக்கல் 2 நாட்கள் தலா 8 மணி நேரம் நடக்கும். மெயின் டெஸ்ட்டில் எழுத்து தேர்வு 1 மணி நேரமும், பிராக்டிக்கல் 1.5 மணி நேரமும் நடத்தப்படும்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் TEP பாஸை மிஸ் செய்த நபரா நீங்க… உங்களுக்கு இருக்கும் கோல்டன் சான்ஸ் இதுதான்… இதை படிங்க செமையா இருக்கும்!
வொர்க் பெர்மிட்டில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது பாஸ்போர்ட் மற்றும் வொர்க் பெர்மிட்டின் காப்பியை மட்டும் டாக்குமெண்ட்டாக சமர்பித்தால் போதுமானது. இந்த டெஸ்ட்டினை முடிக்க கட்டணமாக சிங்கப்பூர் டாலர் S$1,652.40 மட்டுமே கேட்கப்படும். இந்து இந்திய மதிப்பில் 1 லட்சமாக மதிப்பிடப்படுகிறது. வகுப்புகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.