சிங்கப்பூரில் வேலை இடங்களில் விபத்துக்கள் அதிகரித்து வருவதால் தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டு வேலையிட பாதுகாப்புகளை நிறுவனங்கள் கடைபிடிக்கின்றனவா என்பதை கண்காணிப்பதை அரசு தீவிரமாகியுள்ளது. கடந்த வாரத்தில் 33 வயதான வெளிநாட்டு ஊழியர் ஒருவர் வேலை இடத்தில் இறந்த செய்தி சிங்கப்பூரில் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனவே அரசு தற்பொழுது மேற்கொண்ட நடவடிக்கையின் பெயரில் 400க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு 186000 வெள்ளி அபராதமும் வேலைநிறுத்த உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மனிதவள அமைச்சகம் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 700 க்கும் மேற்பட்ட சோதனைகளை நடத்தி இருந்தது. இதன் மூலம் விபத்துகளின் எண்ணிக்கையானது குறைக்கப்பட்டு இருந்தது. சோதனைகளை இடையில் நிறுத்தி இருந்த நிலையில் மீண்டும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் தற்போது பாதுகாப்பு விதிமுறைகளை மறுபடியும் தீவிரமாக கடைபிடிக்கும் நோக்கத்தில் கண்காணிப்பை தீவிர படுத்தியுள்ளது. மேலும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்குமாறு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.