சிங்கப்பூரில் வேலைக்கு செல்வோருக்கு ரூம் மற்றும் வீடுகள் கிடைப்பதில் சிக்கல் அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்தி கொண்ட ஏஜெண்ட்டுகள் சிலர் வீடு அல்லது ரூம் பார்த்து கொடுக்க கமிஷனாக மிக பெரிய தொகையை வசூலித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
சிங்கப்பூரில் எப்போதுமில்லாத அளவு வீட்டு வாடகை 70% வரை அதிகரித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால் வீடுகள் கிடைக்காமல் இங்கிருக்கும் வெளிநாடு ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிலர் இருந்த வீடுகளில் இருந்து காலி செய்ய சொல்லியும் ஓனர்கள் வற்புறுத்துகின்றனராம். இதனால் புதிதாக சிலரை வாடகைக்கு வைத்தால் இரு மடங்கு வாடகை வாங்கலாம் என்பது அவர்களின் ஐடியாவாகி இருக்கிறது.
இந்தியாவில் இருந்து Skilled Test முடித்து சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்திருக்கும் ஊழியர்களுக்கு தங்க இடம் கிடைக்கவில்லை. இதனால் அவர்களின் ஏஜெண்டுகள் முன்னர் தாங்கள் அனுப்பிய ஊழியர்களின் உதவியை நாடுகின்றனர். அவர்களிடம் ரூம் ஷேர் செய்து கொள்ள முடியுமா எனவும் கேட்கும் நிலை உருவாகி இருக்கிறது.
மேலும், வீட்டு ஓனர்கள் வாடகையில் கொஞ்சம் கூட குறைத்துக்கொள்ள முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம். Tenantsகளும் தங்கி இருக்கும் புதிய வீட்டை தேடாமல் இருக்கும் வீட்டிற்கே வாடகையை பாதிக்கு பாதி ஏற்றி கொடுத்துள்ளனர். மீறி புதிய வீடுக்கான தேடுதல் நடத்தும்போது தாங்கள் இருந்த அதே அமைப்புக்கொண்ட வீட்டிற்கு இரண்டு மடங்கு அதிக வாடகையை கேட்கின்றனர். ஏஜெண்ட் மூலமாக தேட நினைத்தால் அவர்களுக்கு கமிஷனும் உச்சத்தில் இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளனர். SRX வாடகைக் குறியீட்டின் படி 2022 இன் முதல் ஒன்பது மாதங்களில், HDB வாடகை 20.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த பிரச்சனையால் Skilled Testக்கு கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் அதிகரித்து இருக்கிறது. சிலர் முறையாக Test முடித்த பின்னரும் சிங்கப்பூர் வராமல் இருக்கிறார்கள். இதனால் திறமையான ஊழியர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கும். மேலும், அவர்களுக்கு தங்க சரியான ஏற்பாடுகள் செய்ய உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த வீட்டு வாடகை பிரச்சனை அடுத்த வருடத்தின் காலாண்டு வரை இருக்கும் என்கிறார்கள். அதை தொடர்ந்து படிபடியாக மீண்டும் பழைய நிலைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.