சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்கூட் நிறுவனங்கள் விமானத்தில் பயன்படும் கார்பன் எரிபொருளுக்கு பதிலாக சஷ்டைனபில் ஏவியேஷன் எரிபொருள் (SAF) எனப்படும் புது வகையான எரிபொருளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. SAF எனப்படும் எரிபொருளானது சமையல் எண்ணெய், விலங்குகளின் கொழுப்புகள் மற்றும் விவசாய கழிவுகள் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை எருபொருள் ஆகும்.
இந்த எரிபொருளை விமானத்தில் பயன்படுத்தும் பொழுது நாம் எப்போதும் பயன்படுத்தும் எரிபொருளை காற்றிலும் குறைந்த அளவு கரியமில வாயுவை வெளியிடுவது இதன் சிறப்பு அம்சமாகும். இதன் மூலம் சுற்றுப்புறச் சூழலை மாசிலிருந்து காக்கலாம் என்ற நோக்கத்தில் 2050 ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயுவை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த முயற்சியை விமானத்துறை கையில் எடுக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளது.
எனவே 2030-ம் ஆண்டுக்குள் எஸ் ஐ எஃப் எரிபொருளின் தேவையானது ஐந்து சதவீதமாக இருக்கும் என உறுதி அளித்துள்ளது. ஏற்கனவே அரபு நாடுகள் அனைத்தும் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கார்பன் உமிழ்வை குறைத்து பயன்படுத்த வேண்டும் என்ற திட்டமிட்டுள்ள நிலையில் சிங்கப்பூரை சேர்ந்த விமான நிறுவனங்களும் இந்த முயற்சியை கையாள திட்டமிட்டுள்ளது.