TamilSaaga

‘சீனாவில் இருந்து அடுத்த அபாயம்’ – Monkey B வைரஸ் தாக்கி கால்நடை மருத்துவர் பலி

சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனாவிற்கே இன்னும் உலக அளவில் விடை தெரியாமல் இருக்கும் நிலையில் சீனாவில் இருந்து மேலும் ஒரு வைரஸ் தாக்கி கால்நடை மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Monkey B என்ற இந்த வைரஸ் தாக்கி சீனாவை சேர்ந்த 53 வயதான கால்நடை மருத்துவர் தற்போது மரணித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இரண்டு குரங்குகளுக்கு உடல்கூறு ஆய்வினை செய்து இந்த மருத்துவருக்கு சில வாரங்கள் கழித்து குமட்டல், வாந்தி போன்ற சில பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன் பிறகு நாளடைவில் நரம்பு பாதிப்பால் அவஸ்தைப்பட்டு வந்த அவர் கடந்த மே மாதம் 27ம் தேதி மரணித்தார். சீனாவில் இந்த குரங்கு பி வைரசுக்கு பலியாகும் முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸ் 1932ம் ஆண்டு கண்டறியப்பட்ட ஒரு வைரஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வைரஸ் குறித்து அவருடன் நெருக்கமாக இருந்தவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் நல்வாய்ப்பாக யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

Related posts