சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் மரியம் ஜாஃபர் அவர்கள் “தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் எத்தனை பேர் தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு கோரி விண்ணப்பித்து உள்ளார்கள்?” என்ற கேள்விதை கேட்டிருந்தார்.
இதற்கு எழுத்து அறிக்கை மூலமாக பதில் கூறியுள்ளார் அமைச்சர் ஓங்.
சிங்கப்பூரில் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் அவர்களுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு ஏதும் இல்லை. அப்படி விண்ணப்பிக்க எந்த அமைப்பும் ஏற்படுத்தப்படவில்லை.
தடுப்பூசி செலுத்தி கொண்டால் நோய் தொற்று ஆபத்து குறைவு என்றாலும் அவர்களால் மற்றவர்கள் பாதிக்கப்படக் கூடிய, தொற்று பரவல் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.
இதனால் தடுப்பூசி போடதவர்கள் பாதிக்கப்படலாம். எனவே நாட்டில் அதிகபட்ச மக்கள் தொகையினருக்கு தடுப்பூசி செலுத்தி முடிக்காமல் தனிமைப்படுத்தி வைப்பதில் விலக்கு அளிக்க இயலாது என்று அமைச்சர் தனது பதில் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.