இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன்கள் மூலம் பல இடங்களில் பல ஊழல்கள் நடந்து கொண்டிருக்கிறது. உலகளாவிய அளவில் இது மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மொபைல் சம்பந்தப்பட்ட ஊழல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சிங்கப்பூரிலும் கடந்த 2023 ஆம் ஆண்டு அதிகபட்சமாக மொபைல் போன்கள் மூலம் ஊழல்கள் நடந்திருக்கிறது. இதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப் போவதாக சிங்கப்பூர் நாட்டின் உள்துறை அமைச்சர் Mrs Toe அறிவித்துள்ளார். என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஒரு மொபைல் போன் யூசர் ஆக நீங்கள் பின்பற்ற வேண்டிய கடமைகள் என பல்வேறு தகவல்களும் இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம் கார்டுகளை பயன்படுத்தி தீய செயல்களை செய்பவர்கள் மிகவும் தீவிரமாக தண்டிக்கப்படுவார்கள் – சிங்கப்பூர் அரசின் உள்துறை அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி சிம் கார்டுகளை தவறாக பயன்படுத்துபவர்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு முதல் முறையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் 2-ம் தேதி ” Law Enforcement and Other Matter” என்ற மசோதா முன்மொழியப்பட்டது. இந்த மசோதாவினால் சிம்கார்டுகளை தவறாக பயன்படுத்துவார்கள் பெரும் சிக்கல்கள் ஏற்படும். இதுகுறித்து சிங்கப்பூரின் உள்துறை அமைச்சகம் கூறியதாவது, இதுபோன்ற சிம் கார்டு ஊழல்களில் பெரும்பாலும் மூன்று குழுக்களை சார்ந்தவர்களால் நடைபெறுகிறது என்று கண்டறியப்பட்டு இருக்கிறது.
தவறான தொலைத்தொடர்பு சந்தாதாரர்கள், சிம் கார்டுகளை விற்கும் இடைத்தரகர்கள், மற்றும் சில்லறை வியாபாரிகள். இந்த மூன்று குழுக்களையும் தீவிரமாக கண்காணித்து இது போன்ற பிரச்சனைகள் எதிர்காலத்தில் வராமல் பார்த்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு சிம் கார்டுகள் சம்பந்தப்பட்ட ஊழல்கள் மட்டும் மொத்தம் 46,000 வழக்குகள் பதியப்பட்டு இருக்கிறது. இந்த வழக்குகளை பாதிக்கப்பட்டோர் மொத்தம் 650 மில்லியன் டாலர்களை இழந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் இதுவே மிகப்பெரிய தொகையாகும்.
கடந்த ஆண்டு IMDA நிறுவனம் SMS Sender ID Registry என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அவர்கள் வெளிநாட்டிலிருந்து ஸ்கேம் கால்கள் வருவது தடுத்த நிறுத்தினர். எனினும் இதுபோன்ற ஊழல்களில் ஈடுபடுபவர்கள் சுதாரித்துக் கொண்டு லோக்கல் மொபைல் நம்பரை பயன்படுத்தி தங்களுடைய கைவரிசையை காட்டுகிறார்கள். பொதுவாக லோக்கல் நம்பரில் இருந்து வரும் எஸ்எம்எஸ் -களை அல்லது கால்களை மக்கள் பெரிதும் நம்புகிறார்கள். இதனை பயன்படுத்தி ஸ்கேமர்கள் தங்களுடைய தீய வேலைகளை செய்கிறார்கள்.
2023 ஆம் ஆண்டு மட்டும் 23 ஆயிரம் லோக்கல் மொபைல் நம்பர்களை இது போன்ற தீய செயல்களுக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. இது கடந்த 2021 விட 4 மடங்கு அதிகமாகும். இதில் 80 சதவீதம் இன்னொருவருடைய தகவல்களை வைத்து ரிஜிஸ்டர் செய்யப்பட்ட சிம் கார்டுகளில் ஆகும்.
இந்த புது சட்டத்தின் கீழ் பொறுப்பற்ற மொபைல் சந்தாதாரர்கள், இடைத்தரகர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் என மூன்று குழுக்களை டார்கெட் செய்து ஸ்கேம்களை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சரியான காரணம் இன்றி மொபைல் சந்தாதாரர்கள் தங்களுடைய பெயரில் இன்னொருவருக்கு சிம் கார்டு ரிஜிஸ்ட்ரேஷன் செய்வது முற்றிலும் தண்டனை கூறியது. குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு காரணங்களுக்காக உங்களுடைய பெயரில் அல்லது தகவல்களை வைத்து சிம்கார்டு ரெஜிஸ்ட்ரேஷன் செய்யக்கூடாது மீறினால் தண்டிக்கப்படுவர்.
அடுத்ததாக வேறு ஒருவருக்கு சிம் கார்டுகளை முறை இன்றி விற்பனை செய்வது அல்லது பணத்திற்காக சிம் கார்டுகளை இன்னொருவருக்கு கொடுப்பது தண்டனைக்குரிய செயலாகும். ஒரு நபர் 11 க்கு மேல் சிம்கார்டுகளை வைத்திருப்பவர்கள் தண்டனை உரியவர்கள். சரியான காரணங்கள் இல்லாமல் இது போன்ற நிறைய சிம் கார்டுகளை வைத்திருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. சில்லறை வியாபாரிகள் வியாபார நோக்கத்திற்காக பல சிம் கார்டுகளை தவறானவர்களுக்கு விற்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
கடந்த 2021 ஆம் ஆண்டு 48 போலியாக வேலை அளிப்பதாக நடத்தப்பட்ட மோசடியில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் தொகையை இழந்துள்ளனர் பலர். இது போன்ற பிரச்சனைகள் எதிர்காலத்தில் வராமல் இருப்பதற்காக புதிய மசோதாவில் இதுபோன்ற செயல்கள் ஈடுபடுபவர்களுக்கான தண்டனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் Computer Misuse Act என்னும் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள்.
தவறான நடவடிக்கையில் ஈடுபடும் மொபைல் சந்தாதாரர்கள் பத்தாயிரம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்.
இடைத்தரகர்கள் மற்றும் சில்லற வியாபாரிகள் பத்தாயிரம் டாலர்கள் அபராதமும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் முதல் முறை வழங்கப்படும்.
இதே செயல்களை எதிர்காலத்தில் திரும்பவும் செய்தால் அப்பொழுது 20,000 டாலர்கள் அபராதமும் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் பெறுவார்கள்.
இது போன்ற தீய செயல்களில் ஈடுபடுபவர்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள, மேலும் ஈடுபடுபவர்களுக்கு உரிய தண்டனை வழங்கவும் இந்த மசோதாவை மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் சட்டத்தின் பிடியிலிருந்து தவறு செய்தவர்கள் தப்ப முடியாது என்று உள்துறை அமைப்புகள் உறுதி அளித்திருக்கிறது. எனவே நீங்களும் இது போன்ற சூழலை சந்தித்து இருக்கிறீர்கள் என்றால் மிகவும் கவனத்துடன் செயலை கையாள வேண்டும்.