TamilSaaga

மாஸாக ரிலீஸ் ஆகும் Galaxy S24…. அதிரடியான ஆஃபரில் Galaxy S23… விலையினை சொன்னா நீங்களே நம்ப மாட்டீங்க!

இளைஞர்களுக்கு எப்போதும் எலக்ட்ரானிக் ஐட்டம் என்றாலே அலாதி பிரியம் தான். அதிலும் செல்போன் மிகவும் ஸ்பெஷல்.24 மணி நேரமும் நம் கூடவே பயணிக்கும் பொருள் என்றால் போன் என்றே சொல்லலாம். அதற்காகவே புது மாடல் வரும் பொழுது அதனை அப்டேட் செய்ய வேண்டும் என்று நினைப்போம். அப்படி என்றால் நீங்கள் உங்கள் செல்போனை மாற்ற வேண்டிய சரியான தருணம் இதுதான்.

சாம்சங் நிறுவனமானது தனது புதிய மாடல் ஆன கேலக்ஸி S24 மாடலை வருகின்ற ஜனவரி 17 அன்று புதிதாக வெளியிட உள்ளது. அதனால் தற்பொழுது சாம்சங் கேலக்ஸி S23 விலையானது குறைந்துள்ளது. சாம்சங் நிறுவனமானது கேலக்ஸி S 23 ரகத்தினை சிறந்த டீலில் வழங்க திட்டமிட்டுள்ளது. எனவே கிட்டத்தட்ட 874.99 டாலரில் இந்த மாடலை மார்க்கெட்டில் நீங்கள் பெறலாம்.

இந்த மாடல் மிகவும் குறைவான விலையில் கிடைப்பது இதுவே முதல் முறையாகும். நீங்கள் டிரேடிங்கில் இருந்தால் மேலும் 525 டாலர் சேமித்து வெறும் 300 டாலரில் இந்த மாடலை பெறலாம். மேலும் ஸ்பெசிபிகேஷன் உள்ள 5 1 2 ஜிபி மாடல் 1054 டாலருக்கும், 1TB மாடல் 1294 டாலருக்கும் விற்பனை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐபோனுக்கு அடுத்தபடியாக போட்டியில் உள்ளது இந்த மாடல் என்பதால் இதனை வாங்க ஏராளமானோர் காத்திருக்கின்றனர். எனவே புதிதாக மொபைல் வாங்க வேண்டும் என்ற ஐடியா இருந்தால் அதை செயல்படுத்துவதற்கு இதுவே சரியான தருணம்.

Related posts