TamilSaaga

ஊராடா இது?”.. சிங்கப்பூரை கம்பேர் செய்து மும்பையை கழுவி ஊற்றிய பெண்! ஒரே ட்ரிப்பில் ஒட்டுமொத்த மரியாதையும் க்ளோஸ்!

இந்திய நாட்டின் மிக முக்கியமான வர்த்தக நகரம்-னா சந்தேகமே இல்லாம அது மும்பை-னு சொல்லலாம். இந்தியாவின் அரசியலை டெல்லி தீர்மானிக்குதுன்னா, மும்பை அதன் பொருளாதாரத்தை தீர்மானிக்கிறது. இன்றைய தேதிக்கு, மும்பையில் ஒருத்தருக்கு சொந்தமா வீடு இருக்குதுன்னா, அவர் அம்பானிக்கே மருமகன் ஆகலாம்.

(பட்.. இப்போ அவருட்ட பொண்ணு தான் ஸ்டாக் இல்ல). சொந்த வீட்டை விடுங்க, கை, கால முடக்கிக்கிட்டு ரெண்டு பேரு படுக்கிற அளவுக்கு ஒரு ரூம் வாடகைக்கு எடுக்கணும்னாலே நீங்க பணக்காரனா இருக்கணும். இதுதான் இப்போது மும்பையின் நிலைமை. இந்த சூழல்ல, மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் சிங்கப்பூருக்கு ஜாலியாக ட்ரிப் வந்து, இப்போது சமூக தளங்களில் மும்பையை கழுவி ஊற்றி வருகிறார்.

சிங்கப்பூர் பத்தி நாம் சொல்லவேண்டியதில்ல

உலகத்திலேயே மிகவும் விலை உயர்ந்த நகரம்னு சொல்வாங்க. இங்க எல்லாமே விலை அதிகம், ஆனா சுத்தமா இருக்கும், பொது போக்குவரத்தும் நல்லா இருக்கும்னு சொல்வாங்க.

இந்த சூழலில், இங்க வந்த அந்த இந்தியப் பொண்ணுக்கு ஒரே ஆச்சரியம். ஏன்னா, இங்கேயும் மும்பையிலேயும் கஃபே, ரெஸ்டாரண்ட் எல்லாம் ஒரே மாதிரி விலை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைஞ்சிருக்காங்க.

சுபின்னு ஒரு பொண்ணு எக்ஸ் தளத்தில், இதுகுறித்த போட்டிருந்த பதிவில், “மும்பையில கஃபே, ரெஸ்டாரண்ட்-னு எல்லாமே விலை அதிகமாக இருக்கும். சிங்கப்பூர்ல ஒரு வாரம் இருந்தேன். இங்கேயும் பாந்த்ராவில இருக்கற ரெஸ்டாரண்ட் மாதிரியே விலை இருக்கு. இது பைத்தியக்காரத்தனம் இல்லையா?”

இதை படிக்க இங்கே க்ளிக் செய்க : நாம எப்பவுமே “கெத்து” தான்! சிங்கப்பூரின் விஸ்தாரா விமானத்தின் கடைசி பயணம்.

“சிங்கப்பூர் உலகத்திலேயே மிகவும் விலை உயர்ந்த நகரம்னு பல ஆய்வுகள் சொல்லுது. நியூயார்க், லண்டன் மாதிரி நகரங்களோட போட்டி போடுது. வீடு வாங்கறது, கார் வச்சுக்கறது, நல்ல ரெஸ்டாரண்ட்ல சாப்பிடறது எல்லாமே அங்க ரொம்ப விலை.

மும்பையும் மலிவான நகரம் இல்லைதான். ஆனா இரண்டு நகரங்களுக்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் இருக்கு. அது என்னன்னா வாங்கற சக்தி.

ஒரு காபி குடிக்கறதுக்கே 450 ரூபாய் ஆகுது. அது நம்மளப் பொறுத்தவரை லக்ஸரி. ஏன்னா நம்ம சம்பளம் வளர்ந்த நாடுகளை விட குறைவு. அதனால இந்த செலவுகளை நம்மால தாங்க முடியாது. சிங்கப்பூர்ல வாடகை மும்பையை விட 20 மடங்கு அதிகம். அப்படி இருந்தும் காபிக்கு ஒரே விலைதான் வாங்கறாங்க. அது மட்டும் இல்லை.

இந்தியாவில நாம எல்லாத்துக்கும் பிரீமியம் விலை வைக்கறோம். ஏன்னா வர்க்க பாகுபாடு இருக்கு. எல்லாரையும் விலக்கி வைக்க விரும்பறோம்”ன்னு நறுக் தெறிச்ச மாதிரி பதிவிட்டிருக்காங்க.

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts