TamilSaaga

முதன் முதலா சிங்கப்பூர் வறீங்களா… நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய சிலமுக்கிய சட்டங்கள்!

உலகில் உள்ள எல்லா நாடுகளும் தங்களுக்கென தனிச்சட்டங்களை வகுத்து இருப்பாங்க! ஒரு நாட்டுடைய சட்டத்திற்கும் மற்றொரு நாட்டினுடைய சட்டத்திற்கும் பல வித்தியாசங்கள் உண்டு. நீங்க ஒரு நாட்டுக்கு போகும்பொழுது முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டியது அந்த நாட்டினுடைய அடிப்படை சட்டங்கள். உதாரணத்துக்கு போக்குவரத்துக்கு விதிகள், பொது நிகழ்வுகளுக்கான சட்டங்கள் போன்றவை.

இங்க சிங்கப்பூர்-லயும் நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய பல சட்டங்கள் உண்டு. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூர் சட்டங்கள் சற்று கடுமையாகவும் இருக்கும். இதுவே அந்த நாட்டினுடைய பெரிய வளர்ச்சிக்கு காரணம்னு சொல்லலாம். மிக சரியான சட்ட ஒழுங்குமுறையை கடைபிடிக்கறதால தான் மிக சிறிய நாடான இது உலக அரங்குல மிக பெரிய இடத்தைப் பிடிச்சு இருக்கு.

சரி! இங்க நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய மிக முக்கிய அடிப்படை சட்டங்களைக் குறித்து பாப்போம்.

1. வெளிநாடுகள்ல சாதாரணமா இருக்கும் Chewing Gum சிங்கப்பூர்-ல தடை செய்யப்பட்டிருக்கு. அதை விற்பதும் பயன்படுத்துவதும் விதிமீறலா அரசாங்கம் அறிவித்துள்ளது. அதனால வெளிநாட்டுல இருந்து வரும்போது அதனைக் கொண்டு வருவதைத் தவிர்க்கவும்.

2. சிங்கப்பூரின் மிக பிரபலமான உணவுப் பகுதி தான் Hawker Center. இங்க பல விதமான உணவுகளும் மலிவான விலையில கிடைக்கும். அதற்க்கு ஏற்றாற்போல் கூட்டமும் நிரம்பி வழியும். உட்கார இடம் கிடைக்காது. அந்த நேரங்கள்ல தங்களுடைய பொருட்களை வைத்து இடம் பிடிக்கும் கலாச்சாரம் பரவலா அங்க இருந்து வருது. தற்பொழுது அந்த செயலை அரசாங்கம் முற்றிலுமா தடை செஞ்சு இருக்கு. வருகிற எல்லாருக்கும் அமர இடம் கிடைக்கனும்னு இந்த சட்டத்தை இயற்றி இருக்கு. எனவே இது போன்ற செயல்களை தவிர்க்கவும்.

3. பொதுவெளிகளில் புகை பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கு. ஒருவேளை நீங்க வெளிநாட்டிலிருந்து வந்தீங்கன்னா Cigarette, E-Cigarette போன்றவற்றைக் கொண்டு வருவதை தவிர்த்திடுங்க.

4. குறிப்பிட்ட பொது இடங்கள்ல கை கோர்ப்பது தவிர அன்பை பரிமாறும் எந்த செயல்களுக்கும் அனுமதி இல்லை. அதே போல கோவில், மசூதிகள் போன்ற இடங்களுக்கு கண்ணியமான முறையில் உடை அணிந்து செல்ல வேண்டும். மீறுவோர் தண்டிக்கப்படுவர்.

5. பொதுவெளிகளில் சிறுநீர் கழிப்பது மற்றும் பொது கழிப்பறைகளை பயன்படுத்தும்பொழுது சரிவர சுத்தம் செய்யாமல் வருவது போன்ற செயல்கள் குற்றமாக கருதப்பட்டு அதற்கு அபராதம் விதிக்கப்படும்.

6. பொதுவெளிகளில் படங்கள் வரைவது மற்றும் வெறுப்பை பதிவு செய்வதுபோல் வாசகங்களை எழுதுவது போன்றவை குற்றமாகக் கருதப்படும். மேலும் இது போன்ற Creative art களுக்காகவே ஒரு குறிப்பிட்ட பகுதியை சிங்கப்பூர் அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. அங்கு உங்களது படைபுத் திறனை பயன்படுத்தலாம். அதுவும் எந்த வெறுப்புணர்ச்சியும் அல்லாமல் இருத்தல் வேண்டும்.

7. போதைப் பொருட்களை பயன்படுத்துவதும் அதனை வைத்திருப்பதும் மிகப்பெரிய குற்றமாகக் கருதப்பட்டு அதற்க்கு கடினமான தண்டனையும் வழங்கப்படும்.

8. அனுமதியின்றி போஸ்டர் அல்லது துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

9. சாலையைக் கடக்க குறிப்பிட்ட இடத்தைத் தவிர வேறு எங்கு கடந்தாலும் அதற்க்கு அபராதம் விதிக்கப்படும்.

10. பாதுகாக்கப்பட்ட அரசாங்க கட்டிடங்கள் மற்றும் ராணுவ கட்டிடங்களை புகைப்படம் எடுக்க வேண்டாம். மேலும் பொது வெளிகளில் சண்டை போடுவது மற்றும் கண்ணியமற்ற வார்த்தைகளை பயன்படுத்துவது எல்லாம் விதி மீறலாகக் கருதப்படும்.

இது தவிர சிங்கப்பூரில் கலாச்சாரம் சார்ந்த பல விதிகள் உள்ளன. இவை அனைத்தும் மக்களின் சுய ஒழுக்கத்திற்க்காக உருவாக்கப்பட்டவை. இருந்தாலும் சில குற்றங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

1. சிங்கப்பூர் மக்கள் வயது மூத்தவர்களை மிக்க மரியாதையுடன் நடத்துவாங்க. ஆட்காட்டி விரலை பயன்படுத்தி ஒருவரை சுட்டிக்காட்டும் பழக்கம் சிங்கப்பூர் மக்களுக்கு இல்லை. அதை மரியாதைக் குறையாக எண்ணுவாங்க. அதற்க்கு பதில் முழு கை அசைவுகளை பயன்படுத்துவாங்க.

2. கோவில் போன்ற இடங்கள்ல கண்ணியமா உடை அணிவாங்க. இந்த விதிமீறலுக்கு அபராதமும் உண்டு.

3. பொது போக்குவரத்துகளை பயன்படுத்தும் மக்கள், அனைவரும் இறங்கிய பின் தான் பஸ்லயோ, ரயில்லயோ ஏறுவாங்க. இது இடையூறற்ற போக்குவரத்துக்கு வழிவகுக்குது.

4. சிங்கப்பூர் மக்கள் வீடுகளுக்குள்ள செல்லும்போது காலணிகளை கழட்டிவிட்டு தான் சொல்வாங்க. இது சுத்தமான பழக்கமா நினைக்குறாங்க.

5. அருகாமையில் உள்ள வீடுகளுக்கோ அல்லது மக்களுக்கோ இடையூறு ஏற்படுத்துவது சிங்கப்பூர் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்க்கு அபராதம் விதிக்கப்படும்.

இது போல பல சட்டங்கள் இருக்கு. ஆனா புதுசா வரவங்களுக்கு இது போன்ற முக்கிய சட்டங்கள் மற்றும் கலாச்சார பழக்கங்கள் தெரிஞ்சிருக்க வேண்டியது அவசியம். ஒருவேளை அறியாமையால் ஏதேனும் பிரச்சனைகள் நேர்ந்தால், அங்கு உள்ள அதிகாரிகளிடம் உங்கள் முழு விவரங்களை சமர்ப்பித்து அவர்களின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அல்லது மேலும் உதவிகள் தேவைப்பட்டால் உங்களுக்கு தெரிந்தவர்களையோ அல்லது வேலை செய்யும் நிறுவனத்திடமோ உதவி கோரலாம். இல்லையென்றால் உங்கள் நாட்டு தூதரகத்தை அணுகலாம்.
விசாரணை முடியும் வரை உங்கள் பாதுகாப்பு மற்றும் விசாரணையை அவர்கள் உறுதி செய்துகொள்வார்கள்.

இதையெல்லாம் தவிர்க்க நாம் இந்த நாட்டின் சட்டப்படி நடந்துகொள்வது அவசியம். தமிழர்கள், சீனர்கள், மலேசியா மற்றும் மேலை நாடுகள் போன்ற பல கலாச்சாரத்தைச் சார்ந்த மக்கள் இங்க வசிக்கறாங்க. ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் ஒவ்வொரு பழக்கங்கள் உண்டு அனைத்தையும் மதித்து நடக்க வேண்டும். கலாச்சாரம், சுய மற்றும் பொதுவெளிகள் சார்ந்த ஒழுக்கங்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும் சிங்கப்பூருக்கு செல்ல இதையெல்லாம் முக்கியமா தெரிஞ்சுக்கோங்க!

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts