தனியா நிறுவனத்தைச் சேர்ந்த ஜெட் விமானம் ஒன்று மலேசியாவின் குடியிருப்பு பகுதியில் மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் குடியிருப்பு பகுதியில் நடந்து சென்றவர்கள் என்றும், எட்டு பேர் விமானத்தில் பயணம் செய்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. எட்டு பயணிகள் மற்றும் இரண்டு விமான கேபின் ஊழியர்கள் உட்பட மொத்தம் பத்து பேர் அந்த விமானத்தில் பயணம் செய்துள்ளதாக தனியார் ஜெட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
லங்காவி விமான நிலையத்திலிருந்து ஆகஸ்ட் 17ஆம் தேதி, வியாழக்கிழமை பிற்பகல் 2.10 மணிக்கு விமானம் புறப்பட்டு சுபாங்கில் உள்ள விமான நிலையத்தை நோக்கி சென்றது. இதனிடையே, பிற்பகல் 2:47 அளவில் கடைசியாக விமான போக்குவரத்து கட்டுப்பாடு அறையுடன் தொடர்பு கொள்ள முயற்சித்தது என்று தெரியவந்துள்ளது. உடனடியாக அடுத்த நாள் நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானம் மோதியடத்திலிருந்து புகை வருவதை கண்டதும் பொதுமக்கள் உடனே கூச்சலிட்டனர். அதன் பின் தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் மற்றும் கோலாலம்பூர் விமானத்துறை மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்த உடல்களை மீட்கும் படியில் ஈடுபட்டனர். விமான நிலையத்தை நெருங்கும் வேளையில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி வெடித்துச் சிதறியது என சம்பவத்தை நேரில் பார்த்தோ கூறினர். மக்கள் அதிகமாக இல்லாத பகுதியில் விமான மோதியதால், பெருமளவு ஆட்சேதம் தவிர்க்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.