சிங்கப்பூர் ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா பகுதியில் 33 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் இன உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், துன்புறுத்தும் உள்நோக்கத்துடனும் பொதுவெளியில் கருத்துக்களை பேசிய காரணத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவழியை சார்ந்த அந்த நபருக்கு மனநல பரிசோதனையும் செய்யப்படும் என காவல்துறை கூறியுள்ளது.
அந்த பூங்காவின் கார் நிறுத்தும் இடங்களில் இரண்டு ஆடவர் குழுக்கள் இருந்துள்ளன. இந்த நபர் அங்கு குழுக்களுக்கு எதிராக இனரீதியாக புண்படுத்தும் விதமாக பேசியதோடு மட்டும்மல்லாமல் துன்புறுத்தும் செயலையும் செய்துள்ளார்.
இது பற்றி புகார் தெரிவிக்கப்பட்ட உடன் காவல்துறை அந்த இடத்துக்கு விரைந்தது. சம்பந்தப்பட்ட நபர் அங்கு இல்லையென்றாலும் பிறகு அவரது அடையாளங்களை வைத்து கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட 21 வயது இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்கப்பட்டார்.
பொது இடத்தில் சட்டத்துக்கு புறம்பான கருத்து கூறியதற்காக 5000 வெள்ளி அல்லது 3 ஆண்டு சிறைதண்டனையும், பொது இடத்தில் தொல்லை செய்த காரணத்துக்கு 2000 வெள்ளி அல்லது 3 ஆண்டு சிறைதண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.