TamilSaaga

140,000 ஆண்டு பழமையான மண்டை ஓடு கண்டுபிடிப்பு… ஆச்சர்யமூட்டும் தகவல்கள்

சீனாவில் வடகிழக்கு பகுதிகளில் நடந்த ஆய்வில் சுமார் 140,000 ஆண்டுகள் பழமையான மனிதனின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மண்டை ஓடானது 50 வயது உள்ள ஒரு ஆணுடையதாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் இது Homo longi எனும் இனத்தை சேர்ந்தவருடைய மண்டை ஓடு எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த மண்டை ஓட்டை வைத்து பார்க்கும்போது முகம் அகலமாகவும் எலும்புகள் கன்னம் போன்றவை தற்போதைய நவீன மனிதர்கள் போன்ற வடிவமைப்பு கொண்டதாகவும் காணப்படுகிறது.

தற்போதுவரை மனித இனத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த Homo longi இனத்தின் அடையாளங்களானது நவீன இன்றைய Homo sapiens வகையிலான மனிதர்களுடன் ஒத்திருக்கிறது.

இந்த பழமையான மண்டை ஓடானது நவீன மனிதர்களின் நெருங்கிய முன்னோர் இனத்தை சார்ந்ததாக இருக்கும் என அடையாளங்கள் தெரிவிக்கின்றன.

PC : AFP

Related posts