பொதுவாக வேலை செய்யும் நிறுவனத்திற்கு வேறு கிளைக்கு அல்லது அந்த நிறுவனத்தின் கிளை இருக்கும் வேறு ஊருக்கு Transfer கேட்டு பெறுவதை நாம் கேள்வி பட்டிருக்கிறோம். அதே போல் சிங்கப்பூரில் Transfer பெற முடியுமா? சிங்கப்பூரை பொறுத்தவரை Transfer நடைமுறை என்றால் என்ன என்பதை வாங்க தெரிஞ்சுக்கலாம்.
ஒரு நிறுவனத்தை மறு சீரமைக்க அல்லது மற்றொரு நிறுவனத்துடன் இணைக்க அல்லது மற்றொரு நிறுவனத்திடம் ஒப்படைக்க அல்லது அந்த நிறுவனத்தின் ஒரு பகுதியை மற்றவர்களுக்கு விற்க அல்லது துணை கம்பெனியை துவக்கும் போது அந்த நிறுவனத்தின் முதலாளி, அந்த நிறுவனத்தில் உள்ள பணியாளர்களை வேறு கம்பெனிக்கு மாற்ற முடியும். நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் கம்பெனியில் மறு சீரமைப்பு பணிகளை நடந்தால் அந்த முதலாளியால் மட்டுமே உங்களை வேறு நிறுவனத்திற்கு மாற்ற முடியும். உங்களின் புதிய முதலாளி, உங்களின் கான்ட்ராக்ட் அடிப்படையில் உங்களிடம் வேலை வாங்க முடியும். மற்றபடி உங்கள் வேலைக்கான விதிமுறைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக தான் இருக்கும். இது தான் சிங்கப்பூரை பொறுத்த வரை Transfer நடைமுறை ஆகும்.
Transfer காலத்தில் ஊழியரின் உரிமைகள் :
- Transfer செய்யப்படும் போது அது தொடர்பாக ஊழியருக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
- இது பற்றி முதலாளியிடம் ஆலோசிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
- ஏற்கனவே உங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தவைகள், புதிய முதலாளியிடமும் தொடர வேண்டும்.
- தற்போதுள்ள முதலாளியிடம் இருப்பதை போலவே புதிய முதலாளியிடமும் உங்களின் கோரிக்கைகளை முன்வைக்க உரிமை உண்டு.
எவற்றை எல்லாம் Transfer செய்ய முடியும் ?
- ஒரு கம்பெனி இன்னொரு கம்பெனிக்கு Transfer செய்யும் போது சொத்துக்களை மட்டுமே Transfer செய்ய முடியும்.
- பங்குகளை Transfer செய்யலாம்.
- சிங்கப்பூருக்கு வெளியில் செயல்பாடுகளை Transfer செய்யலாம்.
- அந்த நிறுவனம் செயல்பட வெளியில் இருந்து ஆட்களை சேர்க்க முடியும்.
Transfer போது ஏற்படும் சிக்கல்கள் :
- Transfer போது ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் நீங்களும், உங்களின் முதலாளியும் கலந்து பேசி முடிவு எடுக்கலாம்.
- ஒருவேளை புதிய ஒப்பந்த விதிகளுக்கு நீங்கள் கட்டுப்படவில்லை என்றால் உங்களின் பழைய முதலாளி மற்றும் தற்போதைய முதலாளி ஆகியோர் உங்களுக்கு நோட்டீஸ் அளித்து, வேலையில் இருந்து விலக்க உரிமை உண்டு.