சிங்கப்பூரில் work permit-ல் வேலை பார்க்கும் பல இளைஞர்களின் கனவு எப்படியாவது s-pass வாங்கி விட வேண்டும் என்பதுதான். ஆனால் அப்படி ஒரு பாசில் இருந்து இன்னொரு பாஸ்க்கு மாறும்பொழுது ஏஜெண்டை நம்பி ஏமாந்து விட வேண்டாம் என்பதற்கு தான் இந்த பதிவு.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞர் சிங்கப்பூரில் சுமார் எட்டு வருட காலமாக வேலை பார்த்து வந்தார். அவரது நிறுவனத்தில் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தான் சொந்த நாட்டிற்கு வர முடியும். ஊதிய உயர்வும் அவ்வளவாக இல்லாததால் அவர் எப்படியாவது s-பாஸ் எடுத்து வெளியேறிவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்.
கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் சிங்கப்பூரில் உள்நாட்டில் உள்ளவர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகமாகியது. அப்பொழுது work permit-ல் வேலை பார்க்கும் நபர்கள் s-pass மாறுவதற்கான அழைப்புகள் ஏஜென்ட்களிடமிருந்து வந்த வண்ணம் இருந்தன.
ஏற்கனவே டிரைவர் வேலையில் இருந்த அவர் மெக்கானிக் வேலைக்கு மாறுவதற்காக விண்ணப்பித்தார். வேலையைப் பற்றிய முன் அனுபவம் சிறிதளவு இருந்த போதும் ஏஜென்ட் அவரை ரெஸ்யூமை மெக்கானிக் வேலைக்கு ஏற்றவாறு மாற்ற சொன்னார்.
அதன்படி அவரும் ஒரு வழியாக வேலைக்கு தேர்வாகி இந்திய ரூபாயின் மதிப்பிற்கு கிட்டத்தட்ட 4 லட்சம் ரூபாய் ஏஜென்ட் பீஸ் ஆக கொடுத்தார். மெக்கானிக் வேலை அவருக்கு மிகவும் புதிதாக இருந்ததால் முதலில் கடினமாக இருந்தது. இரண்டு மாதத்திற்கு வேலை பார்த்த அவர் பாஸிடம் இருந்து அதிர்ச்சிகரமான தகவலை பெற்றார்.
உங்களுக்கு மெக்கானிக் வேலை தெரியவில்லை அதனால் நாங்கள் உங்களது பாசை கட் செய்ய போகின்றோம். உங்களுக்கு வேண்டுமென்றால் வேறு வேலை தேடி கொள்ளுங்கள் என்று கூறினர். இதைக் கேட்டவுடன் அவரது தலையில் இடி விழுந்த மாதிரி இருந்தது.
தற்பொழுது தான் நான்கு லட்ச ரூபாய் கட்டி விட்ட நிலையில் மறுபடியும் பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றார். இதைப்பற்றி அவரது ஏஜென்டிடம் கேட்டபொழுது அவரிடம் இருந்தும் சரியான பதில் வரவில்லை.
அவர் மறுபடியும் work permit வேலை தான் உள்ளது என்றும் ஆனால் அதற்கும் நீங்கள் பணம் செலுத்த வேண்டியது இருக்கும் என்று கூடியவுடன் ” மரத்தில் இருக்கும் பலாபலத்திற்காக கையில் இருக்கும் கலா காயை விட்ட கதை ஆகிவிட்டது”.
சிங்கப்பூரில் இருந்து நீங்கள் இன்னொரு பாசிற்கு மாற வேண்டும் என்றால் உங்களுக்கு ஏற்கனவே முன் அனுபவம் உள்ள துறையில் பணியினை தேடுங்கள். அதுவே சிறந்தது.