TamilSaaga

Warehouse assistant களுக்கு உடனடி வேலைவாய்ப்பு…இந்த வாய்ப்பை தவற விட்டுடாதீங்க

சிங்கப்பூரில் மிகப் பெரிய அளவில் Warehouse assistant பணிகளுக்கான ஆட்கள் தேர்வு நடத்தப்பட உள்ளது. நேர்காணல் நடத்தப்பட்டு, அதே இடத்திலேயே உடனடியாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியிலும் நியமிக்கப்பட உள்ளனர். இந்த அரிய வாய்ப்பை தவற விட வேண்டாம். MTC CONSULTING PTE. LTD, RK RECRUITMENT PTE. LTD ஆகிய நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு ஆட்கள் தேர்வு முகாமை நடத்துகின்றன. இதற்கு முன் அனுபவம் ஏதும் தேவையில்லை என்றும், சிங்கப்பூர் இருப்பவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Warehouse assistant பணி என்பது Warehouse களுக்கு வரும் மற்றும் அங்கிருந்து செல்லும் சரக்குகளை சரியாக சரி பார்க்கும் பணியாகும். பொதுவாக Warehouse assistant பணிக்கான தகுதி என்பது, அந்த நபர் நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். சில சமயங்களில் கடினமான ப பொருட்களை தூக்கி வைக்க வேண்டி இருக்கும் என்பதால், அதற்குரிய உடல் தகுதியை அவர் பெற்றிருந்தது மிகவும் அவசியமாகும்.

ஜூன் 12 ம் தேதி புதன்கிழமையன்று இந்த நேர்காணல் நடத்தப்பட உள்ளது. Alps ave (Changi) என்ற முகவரியில் இந்த நேர்காணல் நடத்தப்பட உள்ளது.

சம்பள விபரம் :

MTC CONSULTING PTE. LTD – அடிப்படை சள்பளம் 2500 டாலர், ஓடி.,யுடன் சேர்த்து 2500 முதல் 3000 டாலர்கள் கையில் கிடைக்கும். போனஸ், அலவன்ஸ் உள்ளிட்டவைகளும் வழங்கப்படும்.

RK RECRUITMENT PTE. LTD – அடிப்படை சம்பளம் 1900 டாலர்கள் வரை. அதோடு பயண படியாக 100 டாலர், அலவன்ஸ், விபி, போனஸ் 1000 டாலர் உள்ளிட்டவைகளும் வழங்கப்படும்.

பணி நேரம் :

MTC CONSULTING PTE. LTD :

திங்கள் முதல் வெள்ளி வரை காலை 08.30 முதல் மாலை 05.45 வரை, சனிக்கிழமையில் காலை 08.30 முதல் பகல் 12.30 வரை

RK RECRUITMENT PTE. LTD :

திங்கள் முதல் வெள்ளி வரை காலை 07.30 முதல் மாலை 04.45 வரை

பணியிட விபரம் :

MTC CONSULTING PTE. LTD – Boon lay
RK RECRUITMENT PTE. LTD – Changi area

போக்குவரத்து pick up இடங்கள்:

* Ang Mo Kio – Tampines
* Bedok – Tampines East
* Pasir Ris – Tanah merch
* Punggol – Jurong East
* Seng Kang

மேலும் விபரங்களுக்கு :

இந்த நேர்காணல், பணி விபரங்கள் உள்ளிட்டவை குறித்த மேலும் விபரங்கள் அறிய கீழ் காணும் நபர்களை தொடர்பு கொள்ளலாம்.
Alderios (R23115859) – 8752 5462
Ivan (R1105608) – 9853 7182

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts