TamilSaaga

உப்பு உள்ளே போகாமல் இருக்க ஜப்பான்காரர்கள் கண்டுபிடித்த சால்ட் ஸ்பூன்..! சுவாரசியமான தகவல்…!

இன்னைக்கு இருக்கற இயந்திர வாழ்க்கைல அனைவருக்கும் ஆரோக்யத்தைக் குறித்த கவலை இல்லாம போச்சு. வேலை வாழ்க்கைனு ஓடிக்கிட்டு இருக்கற மக்கள் எல்லாரும் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா ஆரோக்கியமான வாழ்க்கையை குறித்த விழிப்புணர்வுக்குள்ள வராங்க. எதை அதிகமா சாப்பிடணும் எதை நம்ம உணவுல குறைவா சாப்பிடணும்னு லிஸ்ட் போட ஆரம்பிச்சு இருக்காங்க. அப்படி நாம குறைவா சாப்பிட வேண்டிய ஒரு முக்கிய பொருள் உப்பு.

உப்பில்லா பண்டம் குப்பையிலே-னு நம்ம ஊருல ஒரு பழமொழி இருக்கு. எந்த உணவா இருந்தாலும் அதுல உப்பு இல்லைனா சுவை என்ற ஒன்று இருக்கவே இருக்காது. ஆனால் அந்த உப்பே அதிகமா போனா? ஆரோக்கியம் தான் அழிந்து போகும். உணவுல சேர்க்கப்படும் உப்புல சோடியம் என்ற வேதிப்பொருள் இயற்கையாவே அதிகம் இருக்கும். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 2.3 மில்லி கிராம் வரை தான் சோடியத்தை உட்கொள்ள வேண்டும். அதுக்கு மீறி போனா பல உடல் உபாதைகள் ஏற்படும்.

அதுல முக்கியமான ஒன்னு ரத்த அழுத்தம். Blood Pressure என்ற ரத்த அழுத்தம் உடம்புல சோடியம் அதிகமாகறதால வரும். இது காய்ச்சல் தலைவலி போல உடனே குணப்படுத்த முடியாது. தொடர்ச்சியான மருத்துவ ஆலோசனைகள், மருந்துகள் மற்றும் உணவுக் கட்டுப்பாடுகள் போன்றவற்றால் தான் இதனை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். கட்டுப்பாடு இழந்தால் மீண்டும் ஆரோக்கியம் பாழாகும். அதுக்கு வருமுன் காப்பதே சிறந்ததுதான!

அதுக்காக தான் ஜப்பான் நாட்டில் உள்ள Kirin Holdings என்ற நிறுவனம் புது வகையான ஸ்பூன் ஒன்றை கண்டுபிடிச்சு இருக்காங்க. இந்த ஸ்பூன் மற்ற ஸ்பூன்களைப் போல அல்லாமல், மின்சாரத்தால் இயங்கக் கூடியது.

ஸ்பூன் சாப்பிட தான பயன்படுத்த போறாங்க இதுல எதுக்கு மின்சாரம்-னு யோசிக்கறீங்களா! பயப்பட வேண்டாம் Shock அடிக்காது…

இந்த ஸ்பூன் பிரத்தியேகமாக உணவில் உள்ள உப்பு மற்றும் இதர சுவைகளை மேம்படுத்த உதவுகிறது. நல்லா சமைச்சா சுவை வரும் அதுக்கு எதுக்கு Electric Spoon அது எப்படி சுவையைக் கூட்டும்-னு நீங்க குழம்பறது புரியுது…தொடர்ந்து படியுங்க

இந்த ஸ்பூன் பேட்டரி மின்சாரத்தால் இயங்கக்கூடியது. ஆரோக்கியத்தை காக்க நினைக்கும் பலரும் உப்பு, எண்ணெய், மசாலாக்கள் போன்றவற்றை வழக்கத்தை விட குறைவாகத்தான் பயன்படுத்துவாங்க. அப்படி பயன்படுத்தும்போது உணவின் சுவை மாறலாம். ஆனால் இந்த ஸ்பூன் கொண்டு சாப்பிடும்பொழுது உங்களுக்கு அந்த பிரச்சனை இருக்காது. நீங்கள் இந்த ஸ்பூனைப் பயன்படுத்தி சாப்பிடும்பொழுது இதிலிருந்து வெளிப்படும் குறைந்த அளவிலான மின்சாரம் உணவின் சுவையை அதிகப்படுத்தி காட்ட உதவுகிறது. அப்பொழுது நமது நாக்கின் சுவை அரும்புகள் முழுமையான சுவையை உணரும். ஆனால் உடல் குறைவான மூலப்பொருட்களைத் தான் எடுத்துக் கொள்ளும். அதாவது உடலுக்குள் செல்லும் உணவில் உப்பு எண்ணெய் போன்றவை குறைவாகத்தான் இருக்கும். இப்படி சாப்பிடும்பொழுது ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும் உங்கள் சுவையும் பாதுகாக்கப்படும்.

இந்த ஸ்பூனை Kirin Holdings என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. வித்தியாசமான படைப்புகளுக்கு மட்டுமே வழங்கக்கூடிய Ig Nobel Prize 2023 இந்த ஸ்பூனிற்குத் தான் வழங்கப்பட்டது. இந்த ஸ்பூனைக் குறித்த அதிகாரபூர்வ வர்த்தக அறிவிப்பு மே 20, 2024 அன்று டோக்கியோ-வில் அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட விற்பனைக்காக 200 ஸ்பூன்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. இதன் விலை 19,800 yen அதாவது இந்திய மதிப்பில் 10,536 INR ஆகும்.

மேலும் இந்த ஸ்பூனை சூப் போன்ற திரவ உணவுகளை உண்பதற்கும் பயன்படுத்தலாம். தினசரி உங்கள் உணவுகளுக்கு பயன்படுத்தும் வகையில் சிறந்த தரத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதனை இயக்க 3v லித்தியம் பேட்டரி போதுமானது.

எப்படித்தான் புதுசுபுதுசா யோசிக்கறாங்களோ!

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts