TamilSaaga
jobs in singapore for indians

jobs in singapore for indians | இந்தியர்களுக்கு சிங்கப்பூரில் வேலை

jobs in singapore for indians : வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்றவுடன் பெரும்பாலான இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு நினைவுக்கு வரும் நாடுகளில் நிச்சயம் இருக்கும் ஒரு நாடு –சிங்கப்பூர்! வெளிநாடுகளில் லாபகரமான வேலை வாய்ப்புகளைத் தேடும் இந்தியர்களுக்கு சிங்கப்பூர் மிகவும் விரும்பத்தக்க இடங்களில் ஒன்றாக உள்ளது – அதற்கு அங்கு வாழும் 650,000 இந்திய வம்சாவளியினரே சாட்சி. நல்ல பொருளாதாரம், பலதரப்பட்ட வேலைவாய்ப்புச் சந்தை ஆகியவற்றைக் கொண்டுள்ள சிங்கப்பூர், தொழில்முறை வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என வேலை வாய்ப்புகளை நாடும் நபர்களுக்கு, குறிப்பாக இந்தியர்களுக்கு வளமான வாய்ப்புகளை வழங்குகிறது. சிங்கப்பூரில் எந்தெந்த துறையில் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன என்பது குறித்து லிங்க்டுஇன் (LinkedIn), ஜாப்ஸ்ட்ரீட் (JobStreet) மற்றும் ஜாப்மார்கெட் (JobMarket SG) உள்ளிட்ட தளங்களில் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வுகளின்படி இந்தியர்களுக்கான சிங்கப்பூர் வேலைவாய்ப்புகள் குறித்த சில சுவாரஸ்யமான, மற்றும் பயனுள்ள தகவல்களை இந்த பதிவில் காண்போம்.

தொடர்ந்து வளர்ந்துவரும் சிங்கப்பூர் வேலைவாய்ப்புகளும் பொருளாதாரமும்:

சிங்கப்பூரின் பொருளாதாரம் தொடர்ந்து செழித்து வளர்ந்து வருவதால், பல்வேறு துறைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகளையும் வழங்கிவருகிறது. 2025-ஆம் ஆண்டில், சிங்கப்பூரின் தனிநபர் மொத்த உள்நாட்டு வருமானம் தோராயமாக $95,922 டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர் உலகளவில் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருப்பதற்கு இதுவே ஒரு சான்றாகும். புதிதாக பணியில் சேர விரும்பும் இந்தியர்கள் துவங்கி, சில ஆண்டு அனுபவம் கொண்ட இந்தியர்கள், அனுபவமிக்க இந்திய வல்லுநர்கள் வரை அனைத்து நிலையிலான இந்தியர்களுக்கும் சிங்கப்பூரில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. திறமை உள்ளவர்களை சிங்கப்பூர் எப்போதும் மறுப்பதில்லை.

சிங்கப்பூரில் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் தொழில்துறைகள்:

சிங்கப்பூரில் வேலை தேடும் நபர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள் (facts that Indians seeking jobs in singapore must know) என்று வருகையில், சிங்கப்பூரில் எந்ததெந்த துறையில் எவ்வளவு வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை புரிந்து வைத்திருப்பதாகும். LinkedIn தளத்தில் பதிவான சிங்கப்பூர்வேலைவாய்ப்புகள் குறித்த Job Postings-இன் படி – தகவல் தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகள் (IT jobs), நிதி மற்றும் வங்கி வேலைவாய்ப்புகள் (Finance and Banking jobs), ஹெல்த்கேர் மற்றும் பையோடேக்னாலாஜி வேலைவாய்ப்புகள் (Healthcare and Biotechnology jobs), பொறியியல் வேலைவாய்ப்புகள் (Engineering jobs), சேல்ஸ் மற்றும் மார்கெட்டிங் வேலைவாய்ப்புகள் (Sales and Marketing jobs), சப்ளை செயின் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் வேலைவாய்ப்புகள் (Supply Chain and Logistics jobs), மனித வளத்துறை வேலைவாய்ப்புகள் (HR jobs), ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் சுற்றுலாத் துறை வேலைவாய்ப்புகள் (Hospitality and Tourism jobs), கல்வி மற்றும் பயிற்சி வேலைவாய்ப்புகள் (Education and Training jobs) மற்றும் கன்சல்டிங் மற்றும் ஆலோசனை சேவைகளில் வேலைவாய்ப்புகள் (Advisory Services jobs) – இந்த 10 துறைகளில் சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் நிறைந்துள்ளன.

சிங்கப்பூரின் தகவல் தொழில்நுட்பத் (IT) துறையில் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்புகள்:

சிங்கப்பூர் ஒரு ஸ்மார்ட் தேசமாக மாறி வருவதால், தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுக்கான தேவை அதிகம் உள்ளது. LinkedIn தரவுகளின்படி, சிங்கப்பூரில் சுமார் 25% வேலைவாய்ப்புகளை IT துறை வழங்குகிறது, அதாவது தோராயமாக 15,000 வேலைவாய்ப்புகள் என்று கூறலாம். சிங்கப்பூரின் தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியர்கள் தங்களுக்கென ஒரு வலுவான இடத்தைக் கொண்டுள்ளனர். சாஃப்வேர் டெவலப்மெண்ட் (software development jobs), டேட்டா அனாலிசிஸ் (data analysis jobs) மற்றும் இணைய பாதுகாப்பு (cybersecurity jobs) உள்ளிட்ட துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளதோடு, ஏற்கனவே இத்துறையில் இந்தியர்கள் சிங்கப்பூருக்கு தங்கள் நிபுணத்துவத்தை வழங்கி பங்களித்துள்ளனர். LinkedIn மற்றும் JobStreet போன்ற தளங்களில் IT துறையில் நிறைய வேலை வாய்ப்புகள் பதிவிடப்படுவதைக் காணலாம்.

சிங்கப்பூரின் நிதி மற்றும் வங்கி துறைகளில் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்புகள்:

உலகளாவிய நிதி மையமாக இருக்கும் சிங்கப்பூர், அதன் நிதி மற்றும் வங்கித் துறையில் ஏராளமான வாய்ப்புகளை (finance and banking job opportunites) வழங்குகிறது. சிங்கப்பூரில் தோராயமாக 10,800 அதாவது 18% வேலைவாய்ப்புகளை நிதித்துறை வழங்குவதாக LinkedIn தளம் தெரிவிக்கிறது. சிங்கப்பூரின் நிதி மற்றும் வங்கித் துறையில் இந்தியர்களுக்கு – வங்கி நிறுவனங்கள் (banking institutions jobs), முதலீட்டு நிறுவனங்கள் (investment firms jobs) மற்றும் நிதி ஆலோசனைச் (financial advisory jobs) சேவைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன.

சிங்கப்பூரின் ஹெல்த்கேர் (மருத்துவம்) மற்றும் பயோடெக்னாலஜி துறையில் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்புகள்:

சிங்கப்பூரின் மருத்துவ சேவை மற்றும் பயோடெக் துறை வேகமாக விரிவடைந்து வருவதால், சிங்கப்பூரில் சுமார் 15% வேலைவாய்ப்புகள் (சுமார் 9000) மருத்துவப் பராமரிப்பு (healthcare jobs), பயோடெக்னாலஜி (biotechnology jobs) துறைகளில் உள்ளதாக LinkedIn தரவுகள் வெளிகாட்டுகின்றன. மருத்துவர்கள் (doctor jobs), செவிலியர்கள் (nurse jobs), ஆராய்ச்சியாளர்கள் (researchers jobs) என இத்துறையில் இந்திய வல்லுநர்களுக்கு சிங்கப்பூரில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. LinkedIn மற்றும் JobStreet தளங்களில் நர்சிங் மற்றும் பயோடெக்னாலஜி வேலை வாய்ப்புகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

சிங்கப்பூரில் இந்தியர்களுக்கான பொறியியல் வேலைவாய்ப்புகள்:

சிங்கப்பூரின் பொறியியல் துறை தொடர்ந்து வளர்ந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். அதற்கு அதன் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் புதிய தொழில்நுட்பங்களுமே சாட்சியாக உள்ளது. LinkedIn தளத்தின் தரவுகளின்படி சிங்கப்பூரில் சுமார் 7,200 வேலைவாய்ப்புகள் (12%) உள்கட்டமைப்பு மேம்பாடு (infrastructure development jobs), கட்டுமானம் (construction jobs) மற்றும் பொறியியல் தொழில்நுட்பத்தில் (engineering technology jobs) நிறைந்துள்ளது தெரியவருகிறது. ஆண்டுதோறும் இந்தியாவில் பொறியியல் முடித்துவிட்டு, ஆயிரக்கணக்கானவர்கள் JobStreet போன்ற தளங்களின் மூலம் சிங்கப்பூரில் எண்ணற்ற வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

சிங்கப்பூரில் சேல்ஸ் மற்றும் மார்கெட்டிங் துறையில் இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகள்:

இந்தியர்களுக்கு எண்ணற்ற வேலைவாய்ப்பை வழங்கும் துபாய் போல, சிங்கப்பூர் ஒரு உலக வர்த்தக மையமாக செயல்படுவதால், அதன் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல திறமையான சேல்ஸ் மற்றும் மார்கெட்டிங் நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். சுமார் 10% வேலைவாய்ப்புகள் சேல்ஸ் (Sales jobs) மற்றும் மார்க்கெட்டிங் (Marketing jobs) துறையின் மூலம் சிங்கப்பூரில் கிடைப்பதாக LinkedIn தரவுகள் கூறுகின்றன. இத்துறை சுமார் 6,000 இந்தியர்களுக்கு ஆண்டுதோறும் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. படைப்பாற்றல், கலாச்சார புரிதல், விற்பனை யுக்திகளை வகுத்தல் போன்ற திறன்களுக்காக சேல்ஸ் மற்றும் மார்கெட்டிங் துறையில் இந்திய பட்டதாரிகளுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. B2B சேல்ஸ் (B2B jobs), டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing jobs) அல்லது பிராண்ட் மேனேஜ்மென்ட் (Brand Management jobs) என பல பிரிவுகளில் இணையதளங்களில் நிறைய பணிகளுக்கான வேலைவாய்ப்புகள் சிங்கப்பூரில் கொட்டிக்கிடக்கின்றன.

சிங்கப்பூரில் லாஜிஸ்டிக்ஸ், மற்றும் சப்ளை செயின் மேலாண்மை துறையில் இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகள்:

புவியியல் அடிப்படையில் சிங்கப்பூர் உலகின் முக்கியமான மையமாக அமைந்துள்ளது. இதனால சர்வதேச தளவாட போக்குவரத்து மற்றும் விநியோகச் சங்கிலி எனப்படும் சப்ளை செயின் நிர்வாகத்தில் சிங்கப்பூர் தவிர்க்க இயலாத ஒன்றாக உள்ளது. LinkedIn தளத்தில் பதிவாகும் சிங்கப்பூர் வேலை வாய்ப்புகளில் (Singapore job opportunities in LinkedIn) லாஜிஸ்டிக்ஸ், மற்றும் சப்ளை செயின் மேலாண்மை துறையில் சுமார் 8% அதாவது ஆண்டுக்கு 4,800 பணிகளுக்கான வாய்ப்புகள் பதிவிடப்படுகின்றன. சிங்கப்பூரின் விநியோகச் சங்கிலி செயல்பாடுகளையும், தளவாட நிர்வாகத்தையும் மேம்படுத்துவதில் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களுக்கு துணையாக மேலும் பல இந்தியர்கள் பரிந்துரை (Reference jobs) செய்யப்படுகின்றனர். இன்று ஒரு உலகளாவிய தளவாட மையமாக சிங்கப்பூர் இருக்கிறது என்றால் அதற்கு இந்தியர்கள் பெரும் பங்களித்துள்ளனர் என்பதே உண்மை. LinkedIn மற்றும் JobStreet தளங்களில் லாஜிஸ்டிக்ஸ், மற்றும் சப்ளை செயின் துறையில் உள்ள எண்ணற்ற வேலை வாய்ப்புகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளவும்.

சிங்கப்பூரில் மனித வளத்துறை மற்றும் திறன் மேம்பாட்டு பணிகளில் இந்தியர்களுக்கு உள்ள வாய்ப்புகள்:

மற்ற அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் உள்ளதென்றால், அவர்களை அடையாளம் கண்டு, திறமைசாலிகளை பணியமர்த்துவதில் HR (மனிதவளத் துறை) முக்கியப் பங்கு வகிக்கிறது. சிங்கப்பூர் இதற்கு விதிவிலக்கல்ல, இங்கு ஆண்டுதோறும் சுமார் 4,200 HR வேலைவாய்ப்புகள் (HR jobs in Singapore) அதாவது 7% பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன என்று முக்கிய வேலைவாய்ப்பு தளங்களில் ஒன்றான LinkedIn தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. HR மற்றும் பயிற்சித் துறையில் பட்டம் பெற்ற திறமையான இந்தியர்களுக்கு – திறமை மேலாண்மை (talent management jobs), நிறுவன மேம்பாடு (organizational development jobs) மற்றும் பணியாளர் திட்டமிடல் (workforce planning jobs) ஆகிய பிரிவுகளில் எண்ணற்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன. LinkedIn மற்றும் JobStreet இல் HR பணிகள் தான் அதிகம் பதிவாகுகின்றன. மேலும் இத்தளங்களில் சிங்கப்பூரில் உள்ள மனித வள (HR professionals) அலுவலர்களின் நேரடி தொடர்புகள் கிடைக்கும் வாய்ப்புகளும் நிறைய உள்ளன.

சிங்கப்பூரில் ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் சுற்றுலா துறையில் இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகள்:

சிங்கப்பூரையும் சுற்றுலாவையும் எப்படி பிரித்துப் பார்க்க முடியும்? ஆண்டுதோறும் 13.6 மில்லியன் சுற்றுலா பயணிகள் சிங்கப்பூருக்கு வருவதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை தெரிவிக்கிறது. இது 2023-ஆம் ஆண்டின் புள்ளிவிவரம், இந்த எண்ணிக்கை மேற்கொண்டு அதிகரிக்கும் என்பதே உண்மை. அதாவது இத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என்பதையே இது குறிக்கிறது. அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் அனுபவத்தை சிறந்ததாக ஆக்குவதற்காக புதிதாக நிறைய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. சிங்கப்பூரில் சுமார் 5% வேலைவாய்ப்புகள் அதாவது 3,000 பணியிடங்கள் சுற்றுலா துறையால் உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் கலாச்சாரத்தை புரிந்துகொள்ளும் திறன், விருந்தோம்பல் மேலாண்மை ஆகியவற்றில் இந்தியர்களுக்கு உள்ள புரிதல் காரணமாக, குறிப்பாக இந்திய மகளிர்க்கு இத்துறை நிறைய வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. JobStreet தளத்தில் விருந்தோம்பல் (Hospitality jobs) மற்றும் சுற்றுலா (Tourism jobs) பிரிவில் இந்தியர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் இருப்பதைக் காணலாம்.

எனவே சிங்கப்பூரில் பல்வேறு துறைகளில் உள்ள வேலைக்கான தேவையைப் புரிந்துகொள்வதன் மூலம் இந்தியர்கள் தங்கள் திறன்கள், அனுபவங்கள் மற்றும் பணி சார்ந்த இலக்குகளை அந்நாட்டு தேவைக்கு ஏற்ப சீரமைத்துக் கொள்ள வேண்டும். இந்த முக்கியத் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து தெரிந்துகொள்ள LinkedIn போன்ற தளங்களில் உங்களது நெட்வொர்க்கை விரிவாக்கலாம், அங்கு ஏற்கனவே பணிபுரிபவர்களின் தொடர்புகள் மூலம் வேலை காலியிடங்களை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும் சிங்கப்பூரில் பணியில் உள்ள இந்தியர்களின் வழிகாட்டுதல்களையும் பெறும் வாய்ப்பும் உள்ளது.
7,000-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் சிங்கப்பூரில் உள்ளதால், உலகளாவிய வர்த்தக மையமாக இருக்கிறது. அவற்றில் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்க இந்தியர்களை விரும்புகின்றன. அதற்கு இந்தியர்களின் ஆங்கில அறிவும் ஒரு முக்கியக் காரணம்.

சிங்கப்பூர் சமூகத்தின் பன்முக கலாச்சார கட்டமைப்பு இந்தியர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி, சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 650,000 ஆக உள்ளது. பல்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து முன்னேற நட்பான சூழல் சிங்கப்பூரில் உள்ளது என்பதை இதன் மூலம் அறியலாம். சிங்கப்பூரின் மக்கள் தொகையில் இந்திய பின்னணியைக் கொண்டவர்களே மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

சிங்கப்பூரின் புகழ்பெற்ற கல்வி முறையும் உயர் கல்வி வாய்ப்புகளைத் தேடும் இந்திய மாணவர்களை ஈர்ப்பதோடு, சர்வதேச அளவில் தரவரிசையில் முன்னணியில் உள்ள பல்கலைக்கழகங்கள் சிங்கப்பூரில் உள்ளதால் அங்கு வேலை வாய்ப்புகளைப் பெறுபவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் நல்ல வாய்ப்புகள் உள்ளன.

சிறப்பான வாழ்க்கைத் தரத்தை வழங்குவதில் சிங்கப்பூர் கொண்டுள்ள அர்ப்பணிப்பினை நம்மால் வெளிப்படையாக உணரமுடியும். அதன் சிறந்த சுகாதாரப் பராமரிப்பு, கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் என சொல்லிக்கொண்டே போகலாம். மெர்சர் (Mercer) குவாலிட்டி ஆஃப் லிவிங் சர்வே 2021 – கருத்துக்கணிப்பின் படி வாழ்க்கைத் தரத்தில் சிங்கப்பூர் ஆசியாவில் முதலிடத்தில் இருப்பதால், இங்கு பணிக்கு செல்லும் இந்தியர்கள் தங்கள் தனிப்பட்ட மற்றும் பணி வளர்ச்சிக்கு ஏதுவான சமூக சூழலைப் பெறுவது உறுதி.

எனவே, சிங்கப்பூரின் வளமான பொருளாதாரம், பணம் ஈட்டும் திறன், உலகளாவிய வணிக நிலப்பரப்பு, பன்முக கலாச்சார சமூகம், உலகத் தரம் வாய்ந்த கல்வி முறை, புவியியல் ரீதியான அமைப்பு மற்றும் உயர்ந்த வாழ்க்கைத் தரம் ஆகியவை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைத் தேடும் இந்தியர்களுக்கு சிங்கப்பூரை நம்பர் 1 இடமாக ஆக்கியுள்ளன. ஏதுவான சூழல் மற்றும் ஏராளமான வேலை வாய்ப்புகளுடன், வெற்றிகரமான மற்றும் நிறைவான வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்க விரும்பும் இந்திய திறமைசாலிகளுக்கு சிங்கப்பூர் என்றும் ஆதரவளிக்கும் நாடாக உள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் பெற எங்களது முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க”

Related posts