TamilSaaga

சிங்கப்பூரில் தற்போது எந்தெந்த பிரிவுகளுக்கு மட்டும் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளது? களத்தில் இருந்து Detailed Report!

என்ன சார்! சிங்கப்பூர் போய் வேலை பார்க்க விருப்பமா? நம்ம நாட்டுல இருந்து சிங்கப்பூர் போய் வேலை செய்யும் ஒவ்வொருவரும், தங்க குடும்பத்த வறுமைல இருந்து வெளில கொண்டு வர ரொம்ப பாடுபடுறாங்க. பெரும்பாலும் இந்த மாதிரியான புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிய பெரிய படிப்பு படிச்சவங்களா இருக்க மாட்டாங்க. அதனால தான் தொழிலாளரா அங்க போறாங்க. இருந்தாலும் சிங்கப்பூர் போய் சம்பாதிச்சு வீடு கட்டி பிள்ளைகளை படிக்க வச்சு, கல்யாணம் பண்ணி அப்பப்பா! நல்லா வாழ்ந்துட்டான் பா! இப்படி ஊரே பேசுறது மட்டும் தான் சிலருக்கு தெரியும். அதுக்கு பின்னாடி அவங்க கடந்து வந்த காலங்கள் தெரியாது.

முதல்ல சிங்கப்பூர் போகணும்னு முடிவெடுத்துட்டா அவ்வளவு எளிதா போய்ட முடியாது அதுக்கு பாஸ்போர்ட் தொழில் சார்ந்த பர்மிட் மற்றும் வேலைத்தளத்தோட அனுமதிக் கடிதம்னு நிறைய ஆவணங்கள் தேவை! அதுக்கு முதல்ல வேலை தேவை-னு நீங்க சொல்றது தெரியுது!

எப்படி சிங்கப்பூர்-ல வேலை வாங்குறது? என்ன வேலை கிடைக்கும்? குறைந்த சம்பளத்துக்கு தான் வேலை கிடைச்சு இருக்கே, இன்னும் அதிக சம்பளம் கிடைக்க என்ன பண்ணனும்? இப்படி பல கேள்விகள் பலருக்கும் இருக்கும்.

அதுக்கு உதவ தான் இங்க பல நிறுவனங்கள் மற்றும் இணையதளங்கள் இருக்கு. தஞ்சாவூர்-ல உள்ள SV Consultancy இது போன்ற பல வேலை வாய்ப்பு குறித்த பரிந்துரைகளை சிறப்பா வழங்கி வராங்க.

இன்றைய சூழ்நிலைல சிங்கப்பூரில் ஏற்கனவே வேலை பார்த்தவர்களுக்கு தான் அதிகம் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஏற்கனவே சென்றதை விட அதிக சம்பளமும் கிடைக்கும். அதுக்கு சட்டம் சார்ந்த பல காரணங்கள் உண்டு. ஏற்கனவே அங்க இருந்தவர்களுக்கு பர்மிட், லைசன்ஸ் போன்ற ஆவணங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கும். அதைத் தொடர்ந்து அடுத்த முறை ஆவணங்கள் வாங்குவது எளிது. அதுவும் தற்பொழுது Class 3 & Class 4 டிரைவர், கன்ஸ்ட்ரக்ஸன், U-Turn, குக், பரோட்டா மாஸ்டர், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர் போன்றவர்களுக்கே அதிகம் வேலைகள் கிடைக்கின்றன. மேலும் முன் அனுபவம் இருப்பதால ஏற்கனவே வேலைக்கு சென்று வந்தவங்களுக்கு தான் அதிக வாய்ப்புகள் கிடைப்பதுண்டு.

அப்ப புதிதாக செல்பவர்களுக்கு என்ன தான் வழி. முதல் முறை சிங்கப்பூர் வேலைக்கு எப்படி தான் செல்வது? என்ன வேலை கிடைக்கும்? சம்பளம் எப்படி கிடைக்கும் என்பது தானே உங்கள் கேள்வி! அதற்கும் வழிகளும் வழிகாட்டுதல்களும் உண்டு.

புதிதாக செல்பவர்களுக்கு E-Pass, NTS, போன்ற பர்மிட்ல General Work, Cleaning Work, Dish washing, Meat Cutter போன்ற வேலைவாய்ப்புகளே அதிகம் கிடைக்கிறது. அங்கு சென்று பின்னர் உங்களுக்கான சிறந்த வேலையைத் தேடலாம். அந்த வேலைக்கான Skill Test-களை முடித்து நல்ல சம்பளத்தில் வேலை பெறலாம். மேலும் India Driving License உள்ளவர்கள் ஏதேனும் ஒரு Permit-ல் சென்று Class-3 Driving License எடுத்துவிட்டால் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் கழித்து நல்ல வேலையில் மாறிக்கொள்ளலாம்.

Skill Test என்றால் என்ன? அதற்க்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து நமது தமிழ்சாகா பக்கத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் MyskillsFuture தளத்தின் தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி உங்களுக்கான படிப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களைத் தேடலாம்.

சிங்கப்பூர் தொடர்பான வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்து கொள்ள SV Consultancy-ஐ தொடர்பு கொள்ளவும்.

நிறுவனம்: SV Consultancy, Tanjore
வாட்ஸப்: 8838950093

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

 

Related posts