சிங்கப்பூரின் மிகப்பெரிய நிறுவனத்தில் பல பணிகளுக்கு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த முக்கிய அப்டேட் தான் இந்த செய்தி. சிங்கப்பூரில் மிகவும் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றுதான் PSA இன்டர்நேஷனல். இந்த PSA இன்டர்நேஷனல் நிறுவனம் துறைமுகம், கார்கோ, மற்றும் ஏற்றுமதி துறைகளில் தனித்தன்மை பெற்று திகழ்கிறது.
பொதுவாக சிங்கப்பூர் ஒரு தீவு நாடாக இருப்பதால் இங்கு துறைமுகம் சார்ந்த தொழில்கள் மிகவும் பிரபலகமாக இருக்கும். இந்த PSA இன்டர்நேஷனல் நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் பெரும் சாதனை படைத்திருக்கிறது. அவர்களுடைய சேவைகளை விரிவாக்குவதால் வேலை வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன.
PSA இன்டர்நேஷனல் நிறுவனத்தைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம். ஏனென்றால் ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு முன் அந்த நிறுவனத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இந்த நிறுவனம் 1960 இல் போர்ட் ஆஃப் சிங்கப்பூர் எனும் பெயரில் இருந்தது. அப்பொழுது இந்த நிறுவனம் அரசாங்கத்தினுடைய கட்டுப்பாட்டில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. பின்பு 1970களில் நல்ல வளர்ச்சிகளை கண்டது. ஆனால் 1990க்கு பிறகு இந்த நிறுவனம் முழுமையாக தனியார் நிறுவனமாக மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது இந்த நிறுவனத்தை PSA இன்டர்நேஷனல் எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. 1997 இல் பார்லிமென்ட் பில் பாஸ் செய்த பின் இந்த நிறுவனம் முழுமையாக தனியார் நிறுவனமாக செயல்படுகிறது.
இப்போது இந்த நிறுவனத்தின் சேவைகளை பார்க்கலாம், இந்த நிறுவனத்தின் முக்கிய சேவையாக கார்கோ ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகும். சிங்கப்பூர் தென்கிழக்கு ஆசியாவின் மையப் புள்ளியாக கருதப்படுவதால் இங்கு துறைமுகத்திற்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. இதன் மூலம் இந்த நிறுவனம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறையில் உலகளாவிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிறுவனம் 44 நாடுகளுக்கும் 177 நகரங்களுக்கும் மற்றும் 66 துறைமுக முனையங்களையும் ஒன்றிணைக்கிறது. மேலும் இது 600 துறைமுகம் இணைப்புகளையும் சாத்தியமாக்கி இருக்கிறது.
இவர்களுடைய கடந்த ஆண்டு சாதனையாக கருதப்படுவது 5 மில்லியன் TEU-க்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 6 மில்லியன் -யும் கடந்து இருக்கிறது. இதன் மூலம் சிங்கப்பூரின் துறைமுகத்துறையில் ஈடில்லா நிறுவனமாக விளங்குகிறது. இவர்களுடைய சேவை 600 துறைமுக முனையங்களை இணைப்பதால் 24/7 சேவை தடைப்படாமல் நடந்து கொண்டிருக்கிறது.
தற்போது இந்த பெரிய நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது என்னென்ன job role, யார் யார் விண்ணப்பிக்கலாம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது போன்ற முழு விவரங்களையும் பின்வருமாறு பார்க்கலாம். முதலாவதாக கண்டெய்னர் எக்யூப்மென்ட் ஸ்பெஷலிஸ்ட் (container equipment specialist) மற்றும் கண்டைனர் ஹேண்ட்லிங் ஸ்பெஷலிஸ்ட் (container handling specialist) ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
CONTAINER EQUIPMENT SPECIALIST என்பது பர்மனென்ட் ஜாப் ரோலாக இருக்கிறது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நீங்கள் உயரத்தில் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும் மற்றும் ரொட்டேஷன் ஷிப்டில் வேலை செய்யவும் தயாராக இருக்க வேண்டும். இந்த வேலையில் நீங்கள் ஏழு அடுக்கு உயரம் உள்ள கிரேனில் லாவகமாக பொருளை ஏற்றவும் இறக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இந்த வேலையில் சேர உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியை முடித்த பின் அதற்குரிய சான்றிதழ்களும் வழங்கப்படும். இந்த வேலை அறிவிக்கப்பட்டது மார்ச் மாசம் 7-ம் தேதி. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் மாதம் 5-ம் தேதி 2024 .
CONTAINER HANDLING SPECIALIST என்ற இந்த வேலையும் நிரந்தரமான வேலையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது கட்டுப்பாட்டு மையம் மற்றும் கிரேன் ஆப்ரேட்டர்களுடன் இணைந்து செய்யும் வேலையாகும். டெர்மினல்களுக்கு ட்ரக் வாகனங்களை இயக்கம் வேலையாகும். இந்த வேலையை செய்வதற்கும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியை மேற்கொள்வதால் வேலையை உங்களால் திறம்பட செய்ய முடியும்.
இந்த வேலைக்கான தகுதிகளாக கருதப்படுவது, நீங்கள் சுழற்சி முறையில் அதாவது ரொட்டேஷ்னல் ஷிப்டில் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும். டிரைவிங் லைசன்ஸ் இல்லாதவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஏனென்றால் இதற்கு என சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவதால் அப்போது நீங்கள் லைசன்ஸ் பெறலாம். class 3/ class 4 டிரைவிங் லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு ஸ்பான்சர் ஷிப் அளிக்கப்படுகிறது.
இது மட்டும் இன்றி சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் இந்த வேலையில் சேரும்பொழுது ஜாயின் இன்ஸென்ட்டிவாக SGD 2,000 அளிக்கப்படும். அல்லது நீங்கள் சிங்கப்பூரில் PR பெற்றவர்களாக இருந்தால் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இன்சென்டிவ் அளிக்கப்படும். வேலை டிசம்பர் மாதம் 1-ம் தேதி 2023 -இல் அறிவிக்கப்பட்டது. எந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் டிசம்பர் 31, 2024.
எனவே, இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க, கீழே சிகப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ள PSA நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டின் லிங்கை கிளிக் செய்து அப்ளை பண்ணுங்க.
https://psacareers.singaporepsa.com/cw/en/listing/
சிங்கப்பூரில் வேலை தேடிக் கொண்டிருக்கும் உங்கள் நண்பர்களுக்கும் இந்த செய்தியை உடனே தெரியப்படுத்துங்க!