TamilSaaga

Human Resource Officer, web developer உள்ளிட்ட அலுவலக பணிகளுக்கு வேலைவாய்ப்புகள்

சிங்கப்பூர் : e2i எனப்படும் employment and employability institute பணியாளர்கள் மற்றும் முதலாளிகள் இடையே மிகப் பெரிய பாலமாக இருந்து செயல்பட்டு வரும் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனமாகும். இது வேலை தேடுபவர்களின் தகுதிக்கு ஏற்ற பொறுத்தமான வேலையையும், முதலாளிகளுக்கு அவர்களின் நிறுவனத்தில் காலியாக இருக்கும் உரிய பதவிகளுக்கு ஏற்ற திறமையான நபர்களையும் தேர்ந்து செய்து அளித்து வருகிறது. வேலை வாய்ப்பு மட்டுமின்றி, பணியாளர்களின் திறன் மேம்படுத்துதல், வேலைவாய்ப்பை பெறுவதற்கான வழிகாட்டுதல் உள்ளிட்ட பல சேவைகளையும் இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

வேலை தேடும் தனி நபர்களின் வளர்ச்சிக்கு உதவும் e2i வரும் மே 15ம் தேதி காலை 10 மணி துவங்கி, மாலை 4 மணி வரை Devan Nair Institute for employment and employability, event hall 1, 80 Jurong East st 21, Singapore – 609607 என்ற முகவரியில் மிகப் பெரிய வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்த உள்ளது. இதில் பங்கேற்க உள்ள கம்பெனிகள், அவற்றில் காலியாக உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த விபரங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

operations executive, customer service depot, warehouse assistant, business development manager, hardware and networking engineer, accounts executive, surveyor, depot clerk, senior web developer, sales executive, lubricants உள்ளிட்ட பணிகளுக்கு வேலைவாய்ப்பு காத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பெனிகளும், வேலை வாய்ப்புக்களும் :

* Allied Containers Services : Operations Executive Prime Mover Driver

* Big-Foot Logistics : Class 3/4/ Prime Mover Driver Human Resource Officer

* Call Lade Enterprise : Lashing Container Specialist Prime Mover Driver

* GKE Group : Customer Service Officer/Executive Warehouse Assistant

* Global Alliance Logistics : Indoor Sales and Marketing Executive Outdoor Sales and Marketing Executive

* Hiap Tong Crane & Transport : Crane Operators Lorry Crane Drivers

* JP Nelson: Crane Driver Trailer Driver

* OSG Containers and Modular : Business Development Execive Procurement & Logistics Executive

* Sin Chew Woodpaq : Drivers Movers cum Packers

* YCH Group : Logistics Assistont Logistics Executive

இந்த நேர்காணலில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் https://e2i.sg/3IWYFpG என்ற இணையதளத்திற்கு சென்று தங்களை பற்றிய விபரங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். 6474 0606 என்ற எண்ணில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டும் வேலைவாய்ப்பு முகாம் குறித்த மேலும் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். மே 14ம் தேதியுடன் முன்பதிவுகள் நிறைவடைந்து விடும். அதனால் அதற்கு முன்பாக வேலை தேடுவோர் தங்களின் வருகையை முன்பதிவு செய்து கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நேர்காணலுக்கு வரும் போது உங்களின் resume உடன் NRIC யும் அவசியம் கொண்டு வர வேண்டும். அதோடு உரிய நேரத்திற்கு தவறாமல் வந்து பங்கேற்கும் படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்க ள். இந்த வேலைவாய்ப்பு முகாம் சிங்கப்பூரில் வசிப்பவர்களுக்கு மட்டுமே. வெளிநாட்டினர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க முடியாது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts