சிங்கப்பூர் – ஒரு சின்ன நாடு, ஆனால் வேலை வாய்ப்புக்கு உலகளவில் பேர் போன இடம். இங்கு அனைத்து வகையான வேலைகளுக்கும் வாய்ப்புகள் இருப்பது தான் தனித்தவமான விஷயம். ITI முடிச்சவங்க முதல் பொறியியல் பட்டதாரிகள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் வரை யார் வேண்டுமானாலும் வேலை பெற முடியும். குறிப்பா இந்த AI யுகத்தில் ‘வேலை கிடைக்கலை’னு சொன்னா நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்-னு அர்த்தம். சரி.. இந்த In-Depth கட்டுரையில் எந்தெந்த வேலைகளுக்கு எந்தெந்த நிறுவனங்கள் வேலை கொடுக்குதுன்னும், வேலை தேடும் முறைகளையும் விரிவா பார்க்கலாம்.
ITI படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை
படிப்புகள்: Fitter, Turner, Machinist, Tool & Die Maker.
வேலை விவரம்:
Fitter: உற்பத்தி தொழிற்சாலைகளில் இயந்திரங்கள், கருவிகளை பொருத்துதல், பராமரித்தல்.
Turner: இயந்திரங்களைப் பயன்படுத்தி உலோகப் பாகங்களை வடிவமைத்தல்.
Machinist: இயந்திரப் பாகங்களை உருவாக்குதல், பராமரித்தல்.
Tool & Die Maker: தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் மோல்டுகளை உருவாக்குதல்.
இந்தத் துறையில் கட்டுமானம், கப்பல் கட்டுமானம், உற்பத்தி தொழிற்சாலைகளில் வேலை இருக்கு. சம்பளம் SGD 800-1,500 (ரூ.48,000-90,000).
நிறுவனங்கள்:
Keppel Offshore & Marine: கப்பல் கட்டுமானம், பராமரிப்பு.
Sembcorp Marine: கப்பல் மற்றும் இயந்திர உற்பத்தி.
ST Engineering: உற்பத்தி மற்றும் பொறியியல் சேவைகள்.
Hitachi Asia: இயந்திர உற்பத்தி மற்றும் பராமரிப்பு.
எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறை
படிப்புகள்: Electrician, Wireman, Electronics Mechanic.
வேலை விவரம்:
Electrician: மின் அமைப்புகளை பொருத்துதல், பராமரித்தல், பழுது பார்த்தல்.
Wireman: மின் இணைப்புகளை அமைத்தல், கட்டிடங்களில் வயரிங் செய்தல்.
Electronics Mechanic: மின்னணு உபகரணங்களை பழுது பார்த்தல், பராமரித்தல்.
கட்டுமானம், துறைமுகம், மின்னணு உற்பத்தி துறைகளில் வேலை. சம்பளம் SGD 900-1,800 (ரூ.54,000-1,08,000).
நிறுவனங்கள்:
Schneider Electric: மின் உபகரணங்கள் மற்றும் ஆட்டோமேஷன்.
Siemens Singapore: மின்னணு மற்றும் மின் பொறியியல்.
SP Group: மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு.
Flextronics: மின்னணு உற்பத்தி.
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் துறை
படிப்புகள்: Motor Mechanic, Diesel Mechanic, Mechanic (Tractor).
வேலை விவரம்:
Motor Mechanic: வாகனங்களை பழுது பார்த்தல், பராமரித்தல்.
Diesel Mechanic: டீசல் இயந்திரங்களை பராமரித்தல்.
Mechanic (Tractor): விவசாய இயந்திரங்களை பழுது பார்த்தல்.
வாகன பராமரிப்பு, துறைமுக இயந்திரங்கள், கனரக வாகனங்கள். சம்பளம் SGD 800-1,600 (ரூ.48,000-96,000).
நிறுவனங்கள்:
Cycle & Carriage: வாகன விற்பனை மற்றும் பராமரிப்பு.
Komatsu Asia: கனரக இயந்திரங்கள்.
PSA Singapore: துறைமுக இயந்திர பராமரிப்பு.
Caterpillar Asia: கனரக வாகன உற்பத்தி.
தகவல் தொழில்நுட்பம் (IT)
படிப்புகள்: Computer Operator and Programming Assistant (COPA), Computer Hardware & Networking.
வேலை விவரம்:
COPA: கணினி இயக்குதல், அடிப்படை நிரலாக்க உதவி.
Computer Hardware & Networking: கணினி வன்பொருள் பராமரிப்பு, நெட்வொர்க் அமைப்பு.
IT சேவைகள், தொலைத்தொடர்பு, அலுவலக ஆட்டோமேஷன். சம்பளம் SGD 1,200-2,500 (ரூ.72,000-1,50,000).
நிறுவனங்கள்:
Accenture Singapore: IT சேவைகள் மற்றும் ஆலோசனை.
IBM Singapore: மென்பொருள் மற்றும் நெட்வொர்க் சேவைகள்.
Singtel: தொலைத்தொடர்பு மற்றும் IT ஆதரவு.
Tech Mahindra: IT மற்றும் நெட்வொர்க் சேவைகள்.
சிவில் இன்ஜினியரிங்
படிப்புகள்: Draughtsman (Civil), Mason.
வேலை விவரம்:
Draughtsman (Civil): கட்டிட வரைபடங்கள் தயாரித்தல்.
Mason: கட்டிட கட்டுமானத்தில் செங்கல், கான்கிரீட் வேலைகள்.
சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு: கட்டுமானத் துறை, உள்கட்டமைப்பு திட்டங்கள். சம்பளம் SGD 700-1,500 (ரூ.42,000-90,000).
நிறுவனங்கள்:
CapitaLand: கட்டிட மற்றும் உள்கட்டமைப்பு.
Gammon Construction: கட்டுமான திட்டங்கள்.
Lendlease: உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானம்.
Shimizu Corporation: கட்டிட பொறியியல்.
இன்ஜினியரிங் இல்லாத துறைகள்
ஃபேஷன் மற்றும் டெக்ஸ்டைல்ஸ்:
படிப்புகள்: Dressmaking, Cutting and Tailoring, Upholsterer.
வேலை விவரம்: ஆடை வடிவமைப்பு, தையல், தளவாடங்களை அலங்கரித்தல்.
வேலை வாய்ப்பு: ஆடை உற்பத்தி, சில்லறை விற்பனை. சம்பளம் SGD 600-1,200 (ரூ.36,000-72,000).
நிறுவனங்கள்: Charles & Keith, Love, Bonito, Cotton On.
உணவு மற்றும் பானங்கள்:
படிப்புகள்: Baker & Confectioner, Food Craft.
வேலை விவரம்: பேக்கரி, உணவு தயாரிப்பு.
வேலை வாய்ப்பு: உணவகங்கள், பேக்கரிகள். சம்பளம் SGD 800-1,500 (ரூ.48,000-90,000).
நிறுவனங்கள்: BreadTalk, Food Republic, Tung Lok Group.
அழகு மற்றும் ஆரோக்கியம்:
படிப்புகள்: Hair & Skincare, Cosmetology.
வேலை விவரம்: அழகு சிகிச்சை, முடி பராமரிப்பு.
வேலை வாய்ப்பு: அழகு நிலையங்கள், ஸ்பாக்கள். சம்பளம் SGD 800-1,800 (ரூ.48,000-1,08,000).
நிறுவனங்கள்: Jean Yip Group, Strip, Spa Esprit.
மற்றவை:
படிப்புகள்: Carpenter, Book Binder, Photography.
வேலை விவரம்: மரவேலை, புத்தக பைண்டிங், புகைப்படம் எடுத்தல்.
வேலை வாய்ப்பு: உள்கட்டமைப்பு, ஸ்டுடியோக்கள். சம்பளம் SGD 600-1,200 (ரூ.36,000-72,000).
நிறுவனங்கள்: IKEA Singapore, Objectifs, Sunway Construction.
பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு
பொறியியல் பட்டதாரிகளுக்கு (B.E./B.Tech in Mechanical, Electrical, Civil, IT, etc.)
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்: உற்பத்தி, கப்பல் கட்டுமானம், ஆட்டோமேஷன் (நிறுவனங்கள்: Rolls-Royce, Dyson).
எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்: மின் அமைப்பு வடிவமைப்பு, ஆட்டோமேஷன் (நிறுவனங்கள்: ABB, General Electric).
IT: மென்பொருள் உருவாக்கம், கிளவுட் இன்ஜினியரிங் (நிறுவனங்கள்: Google, Microsoft).
சிவில் இன்ஜினியரிங்: உள்கட்டமைப்பு, கட்டுமானம் (நிறுவனங்கள்: Meinhardt, Woh Hup).
சம்பளம்: SGD 2,500-6,000 (ரூ.1,50,000-3,60,000).
வேலை தேடுவதற்கு ஸ்டெப்-பை-ஸ்டெப் வழிகாட்டி
ஸ்டெப் 1: LinkedIn-ஐ பயன்படுத்துதல்
புரொஃபைல் தயாரிப்பு:
ITI முடிச்சவங்க தங்கள் திறன்களை (எ.கா., Welding, Electrical Wiring) தெளிவா குறிப்பிடுங்க. LinkedIn AI மூலமா உங்க நண்பர்களிடம் பேசுவது போன்று உங்க எதிர்பார்ப்புகளை சொல்லியே வேலை தேடலாம்.
பொறியியல் பட்டதாரிகள் Python, CAD, Cloud Computing மாதிரியான திறன்களை சேர்க்கலாம்.
“Open to Work” ஆப்ஷனை ஆன் பண்ணுங்க.
வேலை தேடுதல்:
LinkedIn Jobs-ல “Singapore” filter போட்டு தேடுங்க (எ.கா., “Electrician Singapore”, “Software Engineer Singapore”).
மேலே குறிப்பிட்ட நிறுவனங்களை follow பண்ணி, வேலை அறிவிப்புகளை track பண்ணுங்க.
நெட்வர்க்கிங்: சிங்கப்பூரில் உள்ள HR மேனேஜர்கள், Recruiters-களோட இணைந்து, அவங்க பதிவுகளுக்கு engage பண்ணுங்க.
ஸ்டெப் 2: AI பயன்படுத்துதல்
AI CV Builders: Resume.io, Canva மூலமா உங்க CV-யை சிங்கப்பூர் மார்க்கெட்டுக்கு ஏத்த மாதிரி தயார் பண்ணுங்க.
Job Matching AI: Indeed, Glassdoor தளங்கள் உங்க திறன்களுக்கு ஏத்த வேலைகளை suggest பண்ணுது.
ChatGPT: கவர் லெட்டர் எழுதவும், இன்டர்வியூ கேள்விகளுக்கு பதில் தயார் பண்ணவும் பயன்படுத்துங்க.
LinkedIn Premium: AI-driven job recommendations கொடுக்குது.
ஸ்டெப் 3: சமூக ஊடகங்கள்
Facebook: நமது “Tamil Saaga Singapore” பக்கத்தில் வேலை வாய்ப்புகள் பற்றி தகவல் கிடைக்கும்.
WhatsApp: சிங்கப்பூர் வேலை குழுக்களில் join பண்ணுங்க, ஆனா scam ஏஜென்ட்களை தவிருங்க.
Job Portals: JobStreet, MyCareersFuture.sg மூலமா வேலை தேடலாம்.
ஸ்டெப் 4: இன்டர்வியூ தயாரிப்பு
ஆவணங்கள்: CV, கவர் லெட்டர், சான்றிதழ்கள் தயார் வைங்க.
ஸ்கில் டெஸ்ட்: ITI முடிச்சவங்க தங்கள் திறன்களை (எ.கா., Welding, Electrical) நிரூபிக்க தயாராகுங்க.
ஆங்கிலம்: சிங்கப்பூரில் ஆங்கில புலமை முக்கியம். Duolingo, LinkedIn Learning மூலமா மேம்படுத்திக்குங்க.
ஸ்டெப் 5: விசா மற்றும் இறுதி நடவடிக்கைகள்
வேலை உறுதியானதும், முதலாளி விசாவுக்கு அப்ளை பண்ணுவாங்க.
Ministry of Manpower (MOM) website-ல உங்க விசா status-ஐ check பண்ணுங்க.
ஆவணங்களை SAL Legalization Portal-ல verify பண்ணுங்க.
யார் என்ன படித்திருந்தாலும் சிங்கப்பூரில் நிச்சயம் வேலை பெற முடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இங்குள்ள வேலை, நிறுவனம், உணவு உள்ளிட்ட விஷயங்கள் உங்களுக்கு ஒத்து வருதா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், வாய்ப்புகள் இருக்கு. அதை முறையா தேடணும். ஏஜெண்ட்ஸ் மூலம் பணம் செலுத்து வேலைக்கு வருவது என்பது அவரவர் விருப்பம். ஆனால், இந்த AI யுகத்தில் சிங்கப்பூரில் வேலை தேடவும், எந்த கம்பெனியில் என்ன வேலை Available-ஆக இருக்கு என்பதை நீங்களே நேரடியாக அறிந்து கொள்ள முடியும் என்பதே நாம் சொல்ல வரும் விஷயம்.