TamilSaaga

ஏஜெண்ட்களை நம்பி காலத்தை வீணடிக்காமல் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல இந்த வழிகளை கையாளுங்கள்!

வெளிநாட்டுக்கு வேலைக்கு போறவங்க ஏதாவது ஒரு ஏஜெண்ட் மூலமா தா போவாங்கனு எல்லாரும் சொல்லுவாங்க. ஆரம்ப காலத்துல இது போல ஏஜெண்ட்டுகளால ஏமாற்றப்பட்ட பல மக்களும் உண்டு. இன்றும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு போக நினைக்கற மக்கள் எப்படி போறது, ஏஜெண்ட் மூலமா போனா ஏமாத்திடுவாங்களா. முதல் முறை வேலைக்கு போகவே இவ்வளவு பணம் கேக்கறாங்களே எப்படி சமாளிப்போம் என பல விதமான கலக்கத்தோட இருப்பாங்க.

அப்படி கவலைப்படுறவங்களுக்கு ஒரு நல்ல செய்தி! வெளிநாடுகளுக்கு வேலைக்கு போக நினைக்கறவங்களோட முக்கிய தேர்வு சிங்கப்பூர் தான்! சிங்கப்பூர் வர மக்கள் நல்லா சம்பாதிக்கணும்னு நெனச்சு தான் வருவாங்க. ஆனா மேலே சொன்ன மாதிரி பல குழப்பங்கள் இருக்கும். அதுக்கெல்லாம் இந்த பதிவுல தீர்வு இருக்கு.

நீங்க சிங்கப்பூருக்கு வேலைக்கு வர எந்த விதமான ஏஜெண்ட்டுகளும் அவசியமே இல்லனா நம்புவீர்களா. அந்த காலத்துல தகவல் தொடர்பு அதிகம் இல்லாததால நம்மால நேரடியா சிங்கப்பூர் குறித்த தகவல்களையோ அல்லது அங்க உள்ள வேலை வாய்ப்புகளைக் குறித்தோ அறிந்துகொள்வது மிகவும் சிரமம். ஆனால் இப்போ அப்படி இல்ல நேரடியா நீங்களே பல வாய்ப்புகளை இணையம் மூலம் தேட முடியும். அதனால பெரும்பாலும் உங்களுக்கு ஏஜெண்டுகளோட உதவி தேவைப்படாது. அதேபோல வேலை வாங்கி கொடுக்க அதிகமான பணமும் கட்ட வேண்டிய அவசியம் இல்லை.

சரி எப்படியெல்லாம் ஏஜெண்ட்-களை தவிர்க்க முடியும்! அவர்களை தவிர்த்து வேலை பெற என்னென்ன வழிகள் இருக்குனு பார்க்கலாம்.

1. இணையத்தில் உள்ள வேலை தேடும் தளங்களை பயன்படுத்துவது.
2. நேரடியாக நிறுவனத்தின் இணைய வழி பக்கத்தில் விண்ணப்பிப்பது
3. தெரிந்தவர்கள் மூலம் நேரடியாக கம்பெனியில் பரிந்துரை செய்யப்படுவது
4. வேலை வாய்ப்புகளைக் குறித்து தொடர்ந்து பதிவிடும் தளங்களை பின்தொடர்வது.

இது போல் இணையத்தைப் பயன்படுத்தி வேலை தேடுவதால், ஏஜெண்டுகள் மூலம் தான் போகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பணம் கட்ட தேவையில்லை. நம்பிக்கையற்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. முக்கியமாக உங்கள் பணம் ஏமாற்றப்படுமோ என்ற கவலை தேவையே இல்லை.

சரி மேலே கொடுக்கப்பட்டது போல எப்படி வேலை தேடுவது?

முதல்ல இணையதளத்துல எந்தெந்த மாதிரியான வேலை தேடும் தளங்கள் உண்டு அதுல சிங்கப்பூர் சார்ந்த வேலைகள் எங்கே அதிகம் பதிவிடப்படும் என்ற தகவலை ஆராய்ந்து கொள்ளுங்கள்! உங்களுக்காக சில பிரபலமான வேலை தேடும் தளங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. Indeed
2. LinkedIn
3. Job Street
4. JobsDB
5. My Careers Future
6. Job Central

மேலே குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான தளங்கள் அனைத்திலும் உங்கள் கல்வித்தகுதிக்கு ஏற்ப வேலைகள் பட்டியலிடப்பட்டிருக்கும். அதற்க்கு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள் யாவையும் தயார் செய்து வைத்துக் கொண்டு விண்ணப்பத்தை சமர்ப்பியுங்கள்.

அடுத்தது நீங்கள் பணிபுரிய விரும்பும் கம்பெனியின் நேரடி வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம். அதற்க்கு உங்கள் துறை சார்ந்த கம்பெனிகள் எத்தனை உள்ளன. உங்களுக்கு எந்த கம்பெனியில் பணிபுரிய விருப்பம் என்பதை நன்கு அறிந்துகொண்டு, உங்களின் அனைத்து தகவல்களையும் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் கம்பெனி நிர்வாகிகளால் அழைக்கப்பட்டு மேற்கொண்டு வேலைகள் தொடரப்படும்.

மூன்றாவதாக தெரிந்தவர்கள் மூலம் விண்ணப்பிப்பது. உங்களுக்கு தெரிந்த நபர்கள் சிங்கப்பூரில் வேலை செய்துகொண்டிருந்தால் அவர்கள் மூலம் அதே கம்பெனியிலோ அல்லது வேறு கம்பெனியிலோ பரிந்துரை மூலம் விண்ணப்பிக்கலாம். இது உங்களுக்கான வேலை கிடைப்பதற்கான சாத்தியங்களை அதிகரிக்கும்.

நான்காவதாக, வேலை வாய்ப்புகள் குறித்து தொடர்ந்து வெளியிடும் நமது தமிழ் சாகா போன்ற இணைய வழி செய்தித் தளங்கள் அல்லது நாளிதழ்கள் போன்றவற்றை தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கலாம். அப்பொழுது உங்களுக்கான வாய்ப்புகள் உடனடியாக உங்களை வந்து சேரும்.

தமிழ் சாகா பக்கத்தில் எப்பொழுதும் புதுப்புது வேலை வாய்ப்புகள் குறித்த செய்திகள் பதிவிடப்பட்டுக்கொண்டே இருக்கும். வாசகர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான முறையில் உங்களுக்கான வேலை வாய்ப்புகளும் அதற்க்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற தகவல்களும் கொடுக்கப்படும். அதனைப் பயன்படுத்தி சிங்கப்பூர் வேலைகளைக் குறித்து அறிந்துகொள்ள முடியும். நமது தமிழ்சாகா செய்தித்தளத்திற்கு முகநூல் (Facebook) பக்கமும் உண்டு. அதனை ஃபாலோ செய்வதன் மூலம் உங்களுக்கான உடனடி வேலை அப்டேட்டுகள் உங்களை வந்து சேரும்.

இதுவரை பல வேலை வாய்ப்பு தகவல்கள் நமது பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளன. அதனை படித்தால் உங்கள் துறையில் எந்தெந்த கம்பெனிகள் உண்டு என்பதை அறிந்துகொள்ளலாம். அந்த செய்திகளில் உள்ள வேலை வாய்ப்பு காலம் முடிந்திருந்தாலும் அங்கே கம்பெனி விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதனைப் பயன்படுத்தி தற்பொழுது அங்கு இருக்கும் வேலை வாய்ப்புகளைப் பற்றி அறிந்து கொண்டு மேலே கொடுக்கப்பட்ட இரண்டாவது வழிமுறையை பின்பற்றுங்க.

உங்கள் வெளிநாட்டு வேலை உங்கள் கையில்!

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts