TamilSaaga

200-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் ஒரே கம்பெனியில் கொட்டிக்கிடக்கிறது!எப்படி Apply செய்யலாம்?

இதோ விபரம்

சிங்கப்பூரில் வேலை கிடைக்காத என பலரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிங்கப்பூரிலேயே மிக முக்கியமான பெரிய கம்பெனி ஒன்றிலேயே 200 க்கும் அதிகமான வேலை வாய்ப்புக்கள் கொட்டி கிடக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் ஆமாம் என்கிறது தான் உண்மை.

ST Engineering :

சிங்கப்பூரில் மிகவும் பிரபலமான ST Engineering எனப்படும் Singapore Technologies Engineering Ltd நிறுவனத்தில் தான் இத்தனை வேலை வாய்ப்புக்களும் உள்ளன. சிங்கப்பூரில் உள்ள MNC கம்பெனியான ST Engineering நிறுவனம் aerospace, marine, smart city, defence and public security உள்ளிட்ட பல துறைகளில் தடம் பதித்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு சிங்கப்பூரிலே பல கிளைகள் உள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரிய defence and engineering குழும நிறுவனங்களில் ST Engineering நிறுவனமும் ஒன்று. உலகின் பல நாடுகளிலும் கிளை அலுவலகங்களை வைத்திருக்கும் இந்த நிறுவனத்தில் 23,000 பேர் உலகம் முழுவதும் பணியாற்றி வருகின்றனர். ஆரம்பத்தில் சிங்கப்பூரில் உள்ள Chartered Industries நிறுவனங்களில் ஒன்றாக துவங்கப்பட்டு, இன்ற மிகப் பெரிய சாம்ராஜ்யமாக இந்த நிறுவனம் உருவெடுத்துள்ளது. பாதுகாப்பு துறை உற்பத்தியில் உலகில் உள்ள டாப் 100 நிறுவனங்களில் இதுவும் ஒன்று.

200 க்கும் அதிகமான வேலை வாய்ப்பு :

ST Engineering நிறுவனம் தனது அனைத்து கிளை அலுவலகங்களிலும் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விபரங்களை அவ்வப்போது தங்களின் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. என்ன வேலை, எந்த துறை, எந்த தேதியில் வேலை வாய்ப்பு தகவல் வெளியிடப்பட்டது, பணியிட விபரம் உள்ளிட்ட தகவல்களையும் வெளியிட்டு வருகிறது. கடைசி 7 நாட்களில் வெளியிடப்பட்ட வேலை வாய்ப்பு குறித்த தகவல்கள் இந்த இணையதளத்தில் இருக்கும். தற்போது பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 200 க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் குறித்த விபரங்களை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ST Engineering நிறுவன வேலைக்கு apply செய்யும் முறை :

  • https://www.stengg.com/ என்ற இணையதளத்திற்கு சென்று, கீழே கொடுக்கப்பட்டுள்ள menu வில் careers என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் அந்த நிறுவனத்தின் பல்வேறு துறைகள் பற்றிய விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த பக்கத்தை scroll கீழே வந்தால் jobs in singapore, jobs in U.S. என இரண்டு ஆப்சன்கள் இருக்கும்.
  • இதில் அமெரிக்க வாய்ப்பை கிளிக் செய்தால் தனியாக ஒரு பேஜ் open ஆகி, அதில் அமெரிக்காவின் எந்தெந்த கிளைகளில், எந்தெந்த துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளது என காட்டும்.
  • jobs in singapore என்பதை கிளிக் செய்து தனியான பக்கம் open ஆகும். அந்த பக்கத்தில் உங்களின் இமெயில் ஐடி கொடுத்து login செய்தோ அல்லது search box ல் உங்களின் துறையை டைப் செய்தாலோ அதில் உள்ள வேலை வாய்ப்பு விபரங்கள் வரும்.
  • அதில் உங்கள் தகுதிக்கு ஏற்ற வேலையை கிளிக் செய்தால், பணியின் பெயர், வேலை செய்ய வேண்டிய இடம் போன்றவற்றுடன், அந்த வேலையின் தன்மை என்ன, என்னென்ன வேலைகள் என்ற முழு விபரம் இருக்கும்.
  • அவற்றை முழுமையாக தெளிவாக படித்து பார்த்து, அனைத்து ஓகே என்றால் அதற்கு அருகில் இருக்கும Apply now என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • அந்த பக்கத்தில் உங்களின் CV upload செய்து, உங்களின் பெயர், நாடு, படிப்பு, முகவரி உள்ளிட்ட சுய விபரங்களை அதற்கான கட்டங்களில் நிரப்பு apply என கொடுத்து விட்டால் நேரடியாக அந்த நிறுவனத்திற்கு உங்களின் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டு விடும்.
  • இதே முறையில் ST Engineering நிறுவனத்தின் அமெரிக்க கிளைகளில் இருக்கும் வேலை வாய்ப்புகளுக்கும் ஆன்லைனிலேயே விண்ணப்பம் செய்து விடலாம்.
  • அல்லது எளிமையாக நேரடியாக Apply Now என்ற இணையதள முகவரியில் சென்றும் உங்களுக்கான வேலை வாய்ப்பு விபரத்தை தெரிந்து கொண்டு, விண்ணப்பத்தை சமர்பிக்கலாம்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts