PSA (Port of Singapore Authority) என்பது சிங்கப்பூரின் வாழ்வாதாரமாக விளங்கும் ஒரு முக்கியமான நிறுவனம். உலகின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகங்களில் ஒன்றாக திகழும் இது, சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
PSA-வின் வரலாறு:
- 1965: சிங்கப்பூர் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட பிறகு, துறைமுகம் சிங்கப்பூரின் முதல் மற்றும் முக்கியமான பொருளாதாரத் தூணாக மாறியது.
- 1964: சிங்கப்பூர் அரசாங்கம் துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.
- 1990: ஐந்து தனித்துவமான துறைமுகங்களாக PSA விரிவடைந்தது.
- 1997: ஒரு கார்ப்பரேஷனாக மாற்றப்பட்டு, PSA கார்ப்பரேஷன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இங்க துறைமுகம், அது சார்ந்த இதர சேவைகள் மற்றும் கார்கோ போன்றவை இயங்கி வருது. துறைமுகத்தில் அனைத்து விதமான கண்டெய்னர்கள் மற்றும் அதனை இயக்குவதற்கான தானியங்கி இயந்திரங்கள் போன்றவற்றை மிக நவீனமான முறையில நிறுவி இருக்காங்க.
அடுத்து குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்து பாதுகாக்கப்படும் பொருட்கள், ஆபத்தான எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பொருட்கள் என அனைத்தையும் சேமித்து வைக்க நூற்றுக்கணக்கான கண்டெய்னர்களை PSA நிறுவனம் கொண்டுள்ளது.
மூன்றாவதாக கார்கோ சேவை. பொருட்களை ஒரு இடத்திலுருந்து மற்றொரு இடத்திற்கு கவனமாக நகர்த்தப் பயன்படும் கார்கோ சேவையும் PSA நிறுவனம் வழங்குகிறது.
மேற்கண்ட மூன்று சேவைகளும் இன்று வரை PSA கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் கீழ் இயங்கி வருது. உலகின் பல நாடுகளில் இருந்தும் மற்றொரு நாட்டிற்கு ஏற்றுமதி இறக்குமதி செய்வதில் துறைமுகம் தான் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஏராளமான கண்டெய்னர்கள் பல நாடுகளுக்கு இன்றும் வந்து சென்று கொண்டிருக்கிறது.
PSA சிங்கப்பூர், உலகின் முன்னணி துறைமுக இயக்க நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் இந்திய குடிமக்கள் பின்வரும் படிகளை பின்பற்றலாம்:
கல்வி: டிப்ளமோ /பொறியியல் (கடல்சார், இயந்திர, மின்னணு), கடல்சார் அறிவியல், வணிக நிர்வாகம், தகவல் தொழில்நுட்பம், கணக்கியல் போன்ற துறைகளில் பட்டப்படிப்பு பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
அனுபவம்: தொடர்புடைய துறையில் 2-3 ஆண்டுகள் அனுபவம் இருந்தால் சாதகமாக கருதப்படும்.
தொழில்நுட்ப திறன்: கணினி அறிவு, தரவு பகுப்பாய்வு, தானியங்கி கருவிகள் பற்றிய அறிவு முக்கியம்.
இதில் டிரைவராக நீங்க PSAல் வரும் போது இந்தியாவில் ஹெவி டிரைவிங் லைசன்ஸ் வைத்திருந்தாலே போதுமானது. லேசிங் வொர்க்ஸ் என்பது துறைமுகத்தில் வந்து நிற்கும் கப்பல்களில் இருக்கும் கண்டெயினர் அசையாமல் இருக்க செய்யும் கம்பு அடைப்பு என்பது தான் வேலையாக இருக்கும். டிரைவராக வேலைக்கு வருபவர்கள் பேட்ச் மற்றும் ஹெவி என இரண்டில் ஒன்று இருக்க வேண்டியது முக்கியம். சாதாரண லைசன்ஸ் இருக்கக் கூடாது. ஆங்கிலம் கண்டிப்பாக பேசத் தெரிய வேண்டும். அல்லது புரிந்து கொள்ளும் அளவிலாவது இருக்க வேண்டும்.
வேலை அனுமதி/விசா: இந்திய குடிமக்கள் சிங்கப்பூரில் பணிபுரிய செல்லுபடியாகும் வேலை விசா தேவைப்படுகிறது.
PSA சிங்கப்பூர் பொதுவாக தகுதியான வேட்பாளர்களுக்கு பின்வரும் அனுமதிகளை பெற்றுத் தருகிறது:
Employment Pass – EP: பட்டப்படிப்புடன் மாத வருமானம் SGD 4,500 க்கு மேல் உள்ள தொழில்முனைவோருக்கு.
S அனுமதி: மாத வருமானம் SGD 2,500 க்கு மேல் உள்ள நடுத்தர திறன் தொழிலாளர்களுக்கு.
தேர்ந்தெடுக்கப்பட்டால், PSA சிங்கப்பூர் வேலை வாய்ப்பு வழங்கும்.
நிறுவனம் பின்வரும் உதவிகளை வழங்கலாம்:
* விசா விண்ணப்பம்
* வேலை அனுமதி (EP) அல்லது S அனுமதிக்கான நிதியுதவி
* குடியேற்ற உதவி
- PSA-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போதுள்ள வேலைவாய்ப்புகளை தேடலாம். https://psacareers.singaporepsa.com/en/listing/
- Indeed, LinkedIn போன்ற வேலைவாய்ப்பு தளங்களில் தேடலாம்.
- சிங்கப்பூரில் உள்ள வேலைவாய்ப்பு முகவர்கள் மூலமாகவும் வேலைவாய்ப்புகளை தேடலாம்.
ஆன்லைன் விண்ணப்பம்: PSA வேலைவாய்ப்பு பக்கம் அல்லது வேலைவாய்ப்பு போர்ட்டல் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். பின்வருவனவற்றை வழங்கவும்:
* Updated CV
* Cover Letter
* Relevant certifications and experience proof.
தேர்வு செயல்முறை:
உங்கள் விண்ணப்பம் மதிப்பாய்வு செய்யப்படும். தகுதியானவர்கள் மேலும் சில தேர்வுகளுக்கு அழைக்கப்படலாம். இது தொழில்நுட்ப தேர்வு, குழு விவாதம் அல்லது நேர்காணல் ஆகியவற்றை உள்ளடக்கலாம். PSA இன் சமூக ஊடக பக்கங்களைப் பின்தொடர்ந்து, நிறுவனம் பற்றிய தகவல்களைப் பெறுங்கள்.