TamilSaaga

புதிய மற்றும் பிரத்தியேக வேலைவாய்ப்புத் தளம்! மாஸ் காட்டும் F&B Sector!

சிங்கப்பூரில் பல துறைகளில் பல விதமான வேலைவாய்ப்புகள் உள்ளன. வேலை தேடுபவர்களுக்கு அந்த வேலை வாய்ப்புகளை அணுக உதவுவதில் முக்கியப் பங்கு வகிப்பது ஆன்லைன் தளங்கள். இந்த தளங்கள் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்புகளைப் பட்டியலிட்டு வழங்கும். இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அந்தந்த நிறுவங்களால் பட்டியலிடப்படும். அதற்கான ஒரு கருவியாக இந்த வேலைவாய்ப்புத் தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏராளமான பொது வேலைவாய்ப்பு செயலிகள் இருந்தாலும், சிங்கப்பூரில் F&B எனப்படும் Food & Beverages துறைக்கு மட்டும் பிரத்தியேகமாக FAB Jobs என்ற ஒரு வேலைவாய்ப்புத் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

ஜூன் 26-அன்று ஜூன் 26 அன்று, ஐந்தாவது Restaurant Asia வர்த்தகக் கண்காட்சியில், Restaurant Association of Singapore (RAS) மற்றும் FastCo நிறுவனம் ஆகியோர் இணைந்து இந்த தளத்தை வெளியிட்டனர். இந்த Fastco நிறுவனம் தான் FastJobs தளத்தை நிர்வகிப்பது. தற்போதைய நிலவரப்படி, FABjobs-ல் 1,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த தளம் F&B நிறுவனங்களுக்கு சிறந்த நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உதவுகிறது. சரியான பரிந்துரைகளை முன்னிலைப்படுத்துவதன் மூலம் சிறந்த மற்றும் சரியான வேலையாட்களை தேர்ந்தெடுக்க நிறுவனங்களுக்கு இந்தத் தளம் உதவுகிறது என்று RAS அதிபர் Andrew Kwan சாண்ட்ஸ் எக்ஸ்போ மற்றும் காங்கிரஸ் மையத்தில் கூறினார்.

கடந்த ஆண்டு இந்தத் தளத்தை உருவாக்கும் போது, RAS துணை அதிபர் பெஞ்சமின் போ கூறியதாவது, சிங்கப்பூரின் F&B துறையின் 70 சதவீதத்தை உள்ளடக்கும் இந்த சங்கம் மற்றும் உறுப்பினர்கள் FastCo நிறுவனத்துடன் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். அதில் வேலைவாய்ப்புகளைத் தொடர்புடைய முழுமையான தகவல்களை பதிவிடுதல் குறிப்பாக சம்பளங்களை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என முடிவு செய்தனர். 

அதன்படி இதில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து வேலை வாய்ப்புகளுக்கும் ஏற்ற சம்பளம் அந்த பதிவிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். F&B துறையில் சம்பளம் மிகவும் குறைவு என மக்களிடையே ஒரு பரவலான கருது நிலவி வருகிறது அதனைத் தவிர்க்கவே சம்பளம் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே அறிவிக்கிறோம் எனவும் பெஞ்சமின் தெரிவித்தார். 

மேலும் மற்ற நிறுவங்களின் ஊதிய செயல்பாட்டை அறிந்துகொண்டு சிறப்பான ஊதியத்தை வழங்கி ஒரு சரியான மற்றும் ஆரோக்கியமான போட்டி நிறுவனங்களுக்குள் ஏற்பட இது உதவும் எனவும் அதன் மூலம் வேலை ஆட்களை எளிதாக கண்டறிய முடியும் எனவும் அவர் தெரிவித்தார். 

மேலும் FabJobs அறிமுக விழாவில் பேசிய State for Trade and Industry-ன் மூத்த அமைச்சரான Low Yen Ling, ” ஏற்கனவே வேலைவாய்ப்புகளுக்காக பல தளங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட துறையில் முழு நேர, பகுதி நேர மற்றும் ஒப்பந்த வேலைகள் என அனைத்து வேலைவாய்ப்புகளும் FABJob-ல் உள்ளது போல் சிறப்பான முறையில் பட்டியலிடப்பட்டிருப்பது அவசியம்” என தனது உரையில் தெரிவித்தார். மேலும் வேலைத் தடை கொண்ட பல மக்களுக்கு எளிதாக வேலை வாய்ப்புகளை இந்த தளம் வெளிச்சம் போட்டு காட்டுவதாகவும், எளிதாக அவர்கள் வேலைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட இந்த தளம் ஒரு வழிகாட்டியாக திகழ்வதாக அவர் தெரிவித்தார். 

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts