TamilSaaga

சிங்கப்பூரில் முன்னணி நிறுவனமான PSA -ல் ஓட்டுநர்  வேலை வாய்ப்பு அறிவிப்பு! விண்ணப்பிக்கும் முறை – முழு விவரம்

PSA (Port of Singapore Authority) என்பது சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான ஒரு நிறுவனம். உலகின் பெரிய கப்பல் துறைமுகங்களில் ஒன்றாக இது திகழ்கிறது.

இங்கு கப்பல் துறைமுகம், அதற்குத் தேவையான மற்ற சேவைகள் மற்றும் சரக்குகள் (கார்கோ) கையாளப்படுகின்றன. துறைமுகத்தில் அனைத்து வகையான கண்டெய்னர்களையும், அவற்றை இயக்கும் தானியங்கி இயந்திரங்களையும் நவீன தொழில்நுட்பத்துடன் அமைத்துள்ளனர்.

இந்த நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது:

Post Name:  Company Driver

பணி விவரங்கள்:

  • நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் மற்ற ஊழியர்களை வாகனத்தில் அழைத்துச் செல்ல வேண்டும்.
  • PSA வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அனுப்பப்படும் பொருட்களைக் கொண்டு சேர்க்க வேண்டும்.
  • வழங்கப்பட்ட வாகனத்தை தினமும் சோதித்து, சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.
  • அலுவலக நிர்வாகப் பணிகளில் (உள்வரும் தபால்களைப் பிரித்தல் போன்றவை) உதவி செய்ய வேண்டும்.

தேவையான தகுதிகள்:

  • கிளாஸ் 3 (Class 3) ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
  • மினிபஸ் ஓட்டிய முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • கிளாஸ் 4 (Class 4) ஓட்டுநர் உரிமம் இருந்தால் கூடுதல் நன்மை. கிளாஸ் 4 உரிமம் இல்லாதவர்களுக்கு, பணி செயல்திறனைப் பொறுத்து, உரிமம் பெறுவதற்கான நிதி உதவி (sponsorship) வழங்கப்படும்.
  • சிங்கப்பூர் சாலைகள் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
  • உடனடியாகவோ அல்லது குறுகிய அறிவிப்பிலோ பணியில் சேரத் தயாராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31/12/2025

Applying Link:   PSA Applying Link

Related posts