சிங்கப்பூர் : சிங்கப்பூரில் கட்டுமான பணி உள்ளிட்ட பணிகளுக்கு work permit பெறுவதற்கு எப்படி சில தகுதிகள் இருக்க வேண்டுமோ, அதே போல் வீட்டு வேலை செய்வதற்கு work permit பெறுவதற்கும் சில குறிப்பிட்ட தகுதிகள் இருக்க வேண்டும். இந்த தகுதிகளை உடையவர்களுக்கு மட்டுமே work permit வழங்கப்படும்.
வீட்டு வேலை செய்ய work permit பெறுவதற்கான தகுதிகள் :
- வீட்டு வேலைக்கு விண்ணப்பம் செய்பவர் பெண்ணாக இருக்க வேண்டும்.
- Work Permit பெறுவதற்கு 23 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
- வீட்டு வேலைக்கு உதவியாளராக வருபவருக்கு 50 அல்லது அதற்கு மேல் இருக்கலாம். ஆனால் அவர்கள் தங்களின் Work Permit ஐ 60 வயது வரை மட்டுமே புதுப்பித்துக் கொள்ள முடியும்.
- வங்கதேசம், கம்போடியா, ஹாங்காங், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மாகேயு, மியான்மர், பிலிப்பைன்ஸ், தென் கொரியா, இலங்கை, தைவான், தாய்லாந்து உள்ளிட்ட சிங்கப்பூர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாடு அல்லது பிராந்தியத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 8 ஆண்டுகளாவது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் அடிப்படை கல்வி பயின்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
Helpers ஆக சேருவதற்கான தகுதிகள் :
- NRIC பதிவு செய்யப்பட்ட முகவரியில் பணியாற்றும் பணியாளராக இருக்க வேண்டும்.
முதல் முறை Helper ஆக வருபவராக இருந்தால் Settling-in Programmeல் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். வேலை தருபவர் helper களுக்கு Settling-in Programme பயிற்சி தேவை என்றால் Work Permit முதல் கட்ட கடிதம் அளிக்கும் போதே தெரிவிக்க வேண்டும்.
- பணியாளர்களின் உறவினராக இருக்கக் கூடாது.
- Work Permit விண்ணப்பம் செய்யும் போது சிங்கப்பூரில் வசிக்கக் கூடாது. முதலாளிகள் சிங்கப்பூருக்குள் IPA கடிதம் பெற்ற பிறகு 5000 டாலர்கள் security bond செலுத்தி Helper ஆக மட்டுமே அழைத்து வழ வேண்டும்.
முதல் முறை helper களுக்கான விதிமுறைகள் :
- helper ஆக பணியாற்ற வருபவர்கள் இதற்கு முன் சிங்கப்பூரில் helper ஆக பணியாற்றி இருக்கக் கூடாது.
- MOM’s Work Pass பிரிவில் வேலை பார்த்தவராக இருக்கக் கூடாது.
- MOM உடன் உதவியாளராக வேலைவாய்ப்புப் பதிவு பெற்றவராக இருந்தால் சிங்கப்பூரில் வேலை செய்தவறாக இருக்கக் கூடாது.