TamilSaaga

உலக வர்த்தக சந்தையில் உயரும் இந்திய ரூபாயின் மதிப்பு.. அமெரிக்க டாலரை ஓரம்கட்ட முயற்சிக்கிறதா இந்தியா? – கைகொடுக்குமா VOSTRO?

உலக வல்லாதிக்க நாடுகளில் அமெரிக்காவிற்கு முன்னணி இடம் உண்டு, இன்னும் சொல்லப்போனால் உலக வர்த்தகம் அனைத்துமே இன்றளவும் அமெரிக்க டாலரில் தான் நடந்து வருகின்றது என்பதே அதற்கு சாட்சி. சரி இந்த பதிவில் அந்த உலக வர்த்தக சந்தையில் புழக்கத்தில் இருக்கும் அமெரிக்க டாலரை அண்டை நாடான இந்தியா ஓரம்கட்ட முயற்சி செய்கிறதா? சரி டாலரை ஓரம்கட்ட ஏன் இந்தியா ஆசைப்படுகிறது?இதுகுறித்து இந்த பதிவில் காணலாம்.

அண்மையில் ரஷ்யா தனது படைகளை கொண்டு உக்ரைன் மீது போர் தொடுத்தது. அந்த போர் இன்றளவும் தொடர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் இந்த முயற்சிக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் SWIFT நாடுகளில் இருந்து ரஷ்யாவை நீக்கியது அமெரிக்கா.

SWIFT – Society for Worldwide Interbank Financial Telecommunication, இது தான் உலக அளவில் நடக்கும் பண பரிவர்த்தனைகளை கையாளும் ஒரு முக்கிய மையமாக திகழ்ந்து வருகின்றது. கீழே உள்ள அந்த படம் SWIFT குறித்து விளக்கும்.

இந்திய நபர் ஒருவர் வேறொரு நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்திடம் கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என்றால் அவர்கள் அதற்கான ஆர்டர் செய்த பிறகு இந்தியாவில் தனது வங்கி கணக்கில் பணம் போடவேண்டும். அதன் பிறகு அந்த இந்திய வங்கி அமெரிக்காவில் உள்ள ஒரு வங்கிக்கு டாலர்களில் பணத்தை மாற்றும்.

இதனையடுத்து பணம் பெற்ற அமெரிக்க வங்கி அதை வேறொரு அமெரிக்க வங்கிக்கு மாற்றி பின் இந்திய நபருக்கு கச்சா எண்ணெய் வழங்கும் அந்த நிறுவனத்தின் நாட்டின் உள்ள வங்கி கணக்கிற்கு சென்று பின் அந்த நிறுவனத்தை சேரும். கொஞ்சம் தலைசுற்றினாலும் இன்றைய உலக வர்த்தகம் இதை மட்டுமே நம்பியுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு மாற்றப்படும் தலைமையகம் – PhonePeயின் தீடீர் முடிவுக்கு என்ன காரணம்?

இதன் மூலம் நாம் அனைத்திற்கும் அமெரிக்காவை நம்பியிருக்க வேண்டும் என்ற சூழல் வருகின்றது, அதுமட்டுமல்லாமல் இப்படி வங்கி வங்கியாக பணம் மாற்றப்படும்போது Exchange Rate தலையை சுற்றும் அளவிற்கு உயரும். உண்மையில் பல கோடிகளில் வர்த்தகம் செய்பவர்கள் சில கோடிகள் Exchange Rate கட்டியே ஆகவேண்டும்.

இந்த சூழலில் தான் அண்மையில் ரஷ்யாவை இந்த SWIFT அமைப்பிலிருந்து தூக்கிய அமெரிக்க, அதன் 300 பில்லியன் டாலர் வங்கி கணக்கை முடக்கியது. இது ரஷ்யாவிற்கு மட்டுமல்ல SWIFT மூலம் பரிவதனை செய்யும் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். இப்படி ஒட்டுமொத்த பன்னாட்டு பரிவர்த்தனையும் அமெரிக்காவின் கையில் இருப்பது சற்று சிக்கலான விஷயம் தான். இன்று ரஷ்யாவிற்கு நடந்து நாளை எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் நடக்கலாம். இந்த நிலையில் இதற்கு மாற்றாக இந்திய யோசித்து வரும் ஒரு விஷயம் தான் VOSTRA.

சிங்கப்பூரில் இருந்து தப்பியோடிய வெளிநாட்டு பெண்.. இருவரை தேடும் Interpol – கடுப்பில் சிங்கை ICA அதிகாரிகள்

VOSTRA என்பது SWIFT போல செயல்படும் ஒரு மையம் தான், ஆனால் இதன் மூலம் நமது வங்கியில் இருந்து நேரடியாக எந்த நாட்டில் உள்ள வங்கிக்கும் பணத்தை அனுப்ப முடியும். ஆகவே இந்த VOSTRA சாத்தியமானால் நிச்சயம் அமெரிக்க டாலரை மட்டுமே நம்பாமல் இந்திய தனது ரூபாயை கொண்டு தனித்து செயல்பட முடியும்.

ஆனால் அப்படி டக்கென்று SWIFTல் இருந்து VOSTRAவுக்கு மாறுவது அவ்வளவு எளிதா என்றால் அதற்கு பதில் நிச்சயம் இல்லை என்பதே. இதில் நடைமுறை சிக்கல் பல உண்டு, ஒரு நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி மற்றும் அந்நாடு பிற நாட்டிற்கு செய்யும் ஏற்டுமதி இறக்குமதி என்று பல காரணிகளை ஆராய்ந்து மட்டுமே இந்த முடிவை எடுக்க முடியும்.

ஆகவே இந்தியா துணிந்து இந்த முடிவை எடுக்குமா? டாலருக்கு மாற்றாக இந்திய ரூபாய் திகழும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts