TamilSaaga

தென்தமிழகத்தை புரட்டி போடும் கனமழை… உடையும் உள்ளூர் கண்மாய்கள்…150 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவு!

தமிழகத்தை பொறுத்தவரை புயல் மற்றும் கனமழை என்றாலே சென்னை உள்ளிட்ட வட மாநிலங்களில் மாவட்டங்களில் ஏற்படுவது தான் வழக்கம். சென்னையில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை கண்டு தென் மாவட்டங்களில் வாழும் மக்கள் பரிதவிக்கும் காட்சி தான் இத்தனை ஆண்டுகளாக நடந்து வருகின்றது. ஆனால் வரலாற்றை புரட்டிப் போடும் அளவிற்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்செந்தூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

அது மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களான மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இந்த வரலாறு காணாத மழைப்பொழிவு பதிவாகி வருகின்றது. காற்று சுழற்சி காரணமாக இவ்வளவு மழை ஏற்படுமா என விஞ்ஞானிகளே ஆச்சரியப்படும் அளவிற்கு மழையானது பதிவாகியுள்ளது. இன்னும் சொல்ல போனால் 150 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பதிவாகியுள்ளது என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

தென் மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் உள்ளூர் கன்மார்கள் உடைந்து உள்ளதால் தெருகளிலும், வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளன. தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற திருச்செந்தூர் கோவில் ஆனது போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தனித்தீவு போல காட்சியளிக்கின்றது. இன்னும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைப்பொழிவு தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் மக்கள் எப்படி இரண்டு நாட்களுக்கு தாக்குப் பிடிக்கப் போகின்றனர் என பயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை இவ்வளவு மழையை காண காணாத தென் மாவட்ட மக்கள் சற்று திணறி போயிருக்கின்றனர். பேரிடர் குழுக்களும் விரைந்து சென்று தங்களால் முடிந்த அளவுக்கு உதவிகளை செய்த வண்ணம் உள்ளனர். பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

Related posts