அண்டை நாடான இந்தியாவில் செயல்படும் IRCTC எனப்படும் Indian Railway Catering and Tourism Corporation இந்தியாவின் முதல் உள்நாட்டு கப்பல் சுற்றுலா சேவையை செப்டம்பர் 18 முதல் தொடங்கவுள்ளது. இதற்காக ரயில்வே பொதுத்துறை நிறுவனம் தனியார் நிறுவனமான கோர்டெலியா குரூஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கப்பலில் பயணம் செய்யும் விருந்தினர்கள் கோவா, Diu, லட்சத்தீவு, கொச்சி மற்றும் இலங்கை போன்ற சிறந்த இந்திய மற்றும் சர்வதேச இடங்களுக்கு தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என்று IRCTC தெரிவித்துள்ளது. IRCTCயுடன் இணைந்து செயல்படும் Cordelia Cruises என்பது M/s Waterways Leisure Tourism Pvt. Ltd நிறுவனத்தின் அங்கமாகும்.
கோர்டெலியா குரூஸின் சில சுற்றுலா பயணத் திட்டங்கள்: மும்பை-கோவா-மும்பை, மும்பை-டியூ-மும்பை, கொச்சி-லட்சத்தீவு உள்ளிட்ட மார்க்கங்களில் செயல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி வருகின்றது. மேலும் தற்போது தொற்று அதிக அளவில் இருப்பதால் கோவிட் நெறிமுறைகள் இந்த பயணத்தில் கட்டாயம் பின்பற்றப்படும். மற்றும் குழு உறுப்பினர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்படுவார்கள். அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ உத்தரவின் படி விருந்தினர்களின் எண்ணிக்கையும் குறைந்த அளவில் சேர்க்கப்படும்.
IRCTC இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் http://www.irctctourism.com. மேலும் தற்போது IRCTC அனைத்து முக்கிய சர்வதேச கப்பல்களுடனும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் செயல்முறையில் உள்ளது மற்றும் கோவிட் அமைப்பு இயல்புநிலைக்கு வந்தவுடன் அதன் இணையதளத்தில் தங்கள் முன்பதிவுகளை வழங்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.