TamilSaaga

பிரான்சில் அதிவேகத்தில் திறந்த வெளி Coffee கடைக்குள் நுழைந்த கார்… பெண் ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் திறந்த வெளி காப்பி கடைக்குள் ஒரு கார் அதிவேகமாக நுழைந்து விபத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் சிக்கிய 35 வயது பெண்மணி ஒருவர் கவலைக்குரிய வகையில் உயிரிழந்துள்ளார். அவர் அந்த கடையில் சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டு இருந்துள்ளார். மேலும் 6 பேர் இந்த விபத்தில் காயமடைந்தனர். அதில் ஒருவரின் நிலை மோசமான சூழலில் உள்ளது.

சாலையில் வேகமாக வந்துகொண்டு இருந்த அந்த காராணது திடீரென தன் கட்டுப்பாட்டை இழந்த காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காரில் ஓட்டுனருடந் இருந்த மற்றொருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காரை ஓட்டிய சாரதி என்பவரை தப்பித்த நிலையில் அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts