பிரான்சில் கொரோனா தொற்று அதிகமாகும் நிலையில் இனி ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் ‘வைரஸ் பாஸ்’ கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் நீண்ட தூரத்திற்கு ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்ய முற்படும் அனைவரும் QR குறியீடு மூலம் கோவிட் தடுப்பூசி சான்றை காட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் மற்றும் காஃபி ஷாப்களிலும் உயிரை சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்படுள்ளது.
டெல்டா கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் இந்த விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கை மக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள உந்தக்கூடிய ஒரு திட்டத்தின் பகுதியாக பார்க்கப்படுகிறது.
ஒருவர் இந்த பாஸை (Virus Pass) பெறுவதற்கு அவர்கள் கோவிட் -19 தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழ் அல்லது சமீபத்தில் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்தார் என்ற ஆதாரம் அல்லது சமீபத்தில் சோதனை செய்த நெகட்டீவ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.