TamilSaaga

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் குண்டு வீசி தாக்குதல்.. தீ பிடித்து எரிந்த தூதரகம் – கியூபா கண்டனம்

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கியூபா நாட்டின் தூதரகம் பாரிஸ் நகரத்தில் இயங்கி வருகிறது. இந்த தூதரகத்தின் மீது நடந்துள்ள வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதை கியூபா தூதரகம் தனது சமூகவலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. தூதரக வளாகத்தில் தீப்பற்றி எரியும் புகைப்படத்துடங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது கியூபா தூதரகம்.

இந்த வெடிகுண்டு தாக்குதலை சில மர்ம நபர்கள் கியூபா தூதரகம் நடத்தியுள்ளனர் என தெரியவந்துள்ளது. அவர்கள் தூதரகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடந்த உடனே தீ பரவி எரிய துவங்கியுள்ளது. ஆனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் உடனடியாக தீ அணைக்கப்பட்டுள்ளது என தூதரகம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள தங்கள் தூதரகத்தின் மேல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது கியூபா.

Related posts