பிரான்ஸ் நாட்டில் வருகின்ற அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து பெருந்தொற்றுக்கு இலவசமாக வழங்கப்படும் பரிசோதனைகளை முடிவுக்குக் கொண்டு வர பிரான்ஸ் நாட்டு அரசு தற்போது திட்டமிட்டுள்ளது. பெருந்தொற்று தடுப்பு சட்டத்தை முன்னிலை படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கையை பிரான்ஸ் அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி நிலவரப்படி சுமார் 67 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பிரான்சின் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பிரான்ஸ் நாட்டின் மக்கள் தொகையில் 67.2 சதவீதம் பேர் முதல் தடுப்பூசியை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த மாதம் முடிவதற்குள் 50 மில்லியன் பேருக்கு முதல்வர் டோஸ் தடுப்பூசியும் 35 மில்லியன் பேருக்கும் முழுமையான இரண்டு டோஸ் தடுப்பூசியும் வழங்க முடியும் என்று பிரான்ஸ் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது நினைவுக்கரத்தக்கது.
இந்நிலையில் அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து பெருந்தொற்றுக்கு இலவசமாக வழங்கப்படும் பரிசோதனைகளை முடிவுக்குக் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது.