TamilSaaga

பிரான்ஸில் சிறப்பு கோவிட் பாஸ்போர்ட் மற்றும் கட்டாய தடுப்பூசி திட்டம்… ஜனாதிபதி முயற்சியும் மக்களின் போராட்ட எழுச்சியும் – முழுத் தகவல்கள்

சிறப்பு கோவிட் -19 பாஸ்போர்ட் மற்றும் தடுப்பூசிகளை கட்டாயமாக்கும் சட்டத்தை பிரான்ஸ் அரசு நிறைவேற்றுகிறது . புதிய நடவடிக்கைகளுக்கு எதிரான மக்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கிடையில் ஒரு சமரசம் எட்டப்பட்டது. இது சிவில் உரிமைகளுக்கு மீறல் என்று பலர் கூறிவருகின்றனர் .

பிரெஞ்சு நாடாளுமன்றம் திங்களன்று சிறப்பு கோவிட் -19 பாஸ்போர்ட்களை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றியமைக்கும் திட்டம் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது . நாடு முழுதும் மீண்டும் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான போராட்டத்தில் மக்கள் தொடர்ந்தது ஈடுபட்டு வருகிறார்கள்.

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கடந்த வாரம் ஹெல்த் பாஸ் – முழு தடுப்பூசி அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கொண்டே பிரெஞ்சு சினிமாக்கள், இரவு விடுதிகள்,ரயில்கள் மற்றும் விமானங்கள் போன்ற எந்தவொரு பொது இடங்களையும் பார்வையிட வேண்டும் என்று உத்தரவிட்டார். இது ஆரம்பத்தில் பெரியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் ஆனால் செப்டம்பர் 30 முதல் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாயமாகிவிடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது .சுகாதார பாஸ் காகிதம் அல்லது டிஜிட்டல் வடிவத்தில் இருக்கலாம்.

சுகாதாரத் துறையில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் செப்டம்பர் 15 க்குள் தடுப்பூசி போட ஆரம்பிக்க வேண்டும் அல்லது வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் சட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த மசோதா ஆறு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

புதிய சட்டங்கள் கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசிகளை சிறந்த ஆயுதமாக மாற்றுவதற்கான மக்ரோன் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாகும், ஏனெனில் புதிய வகை கொரோனா நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை பாதிக்கின்றன. பிரான்சில் 1,11,000 க்கும் அதிகமானோர் இந்த வைரஸால் தங்கள் உயிரை இழந்துள்ளனர், இது இந்த மாத தொடக்கத்தில் தினசரி 20,000 புதிய தொற்றுநோய்களைப் பதிவாகியுள்ளது .

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட தேசிய ஒற்றுமையுடன் மக்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள மக்ரோன் வேண்டுகோள் விடுத்தார். மேலும் தடுப்பூசிக்கு எதிராக எதிர்ப்பு உணர்வு தூண்டியவர்கள் மீது சாடினார்.

சிறப்பு பாஸ்போர்ட் விதி மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு கட்டாய தடுப்பூசிகளுக்கு எதிராக கடந்த (ஜூலை.24) சனிக்கிழமை நாடு முழுவதும் சுமார் 1,60,000 பேர் போராட்டங்களை நடத்தினர். பலறும் என்ன செய்ய வேண்டும் என்று அரசாங்கம் அவர்களிடம் சொல்லக்கூடாது என்றும் கூறினார்.

Related posts